பக்கம் எண் :

114

ஆதிக்கத்தை வளர்த்துவந்தனர். விஜய நகர அழிவுக்கு ஏதுவான
தொந்தரவுகளினால் மதுரை நாயக்கரோடு சேர்ந்துகொண்டு அவர்களுக்குச்
செய்த உதவிக்காக மைசூரிற் சில நிலங்களை அடைந்து அவர்களோடே
வேலை செய்து வந்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில்
சிற்றரசர்களாகவுமிருந்தனர். கடைசியாக மைசூர் தோட்ட தேவ ராஜாவுக்குக்
கீழ்ப்படிந்தனர். 164-ம் வருஷத்தில் கந்தருவ நரச ராஜாவின் சேனைகள்,
காவேரிபுரம் கணவாய் வழியாக இறங்கி வணங்கா முடிக்கட்டி முதலியைத்
தோற்கடித்தது. இந்தக் கந்தருவ நரசவேந்தன் சேனையில் வாரணவாசி
சேர்ந்திருந்தது வணங்கா முடிக்கட்டி முதலியுஞ் சேனையுந் தோல்விபெறச்
செய்தனன் என்ப.

                        வெண்பா

                         (மேற்)

மாற்றலர்மண் கொள்ளும் வணங்கா முடிக்கட்டி
ஆற்றலழிந் தேங்கி யடங்கினான் - தாற்றரம்பைப்
பூங்கனித்தேன் பாய்மருதப் பூந்துறையான் சேனைமதிற்
பாங்குறுத்துச் செய்கொடுமை பார்த்து.

(தனிப்பாட்டு)

                    பயறு மிளகானது

84.



அணித்திகழ் சேர்தென் கரைநாட்டி லப்பிர மேயருக்கு
பணித்தொழி லான தளர்ச்சியி னால்வெறுப் பாயொர்செட்டி
எணித்தொலை யாத மிளகைப் பயறென வெம்பெருமான்
மணிப்பய றாக்கின தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே

     (க-ரை) தென்கரை நாட்டில் எழுந்தருளிய அப்பிரமேயருக்கு
மிளகைப் பயறென ஒரு செட்டி பொய் சொன்னவாறே அம்மிளகு
பயறானதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- மலையாளத்துக் கொச்சியி மிளகு கொண்ட ஒரு
வேளாளண் வணிகன் வறுமையில் மெலிந்து இனி வெளிச் சென்று
வர்த்தகஞ் செய்யவேண்டுமென்று தீர்மானித்தான். எருதுகளின் மேல்
மிளகுப் பொதிகளை ஏற்றிக்கொண்டு ஆம்பிராவதி தீரமான தென்கரை
நாட்டில் இடைஞானியாராற் பூசிக்கப்படும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள
வனத்தில் வந்து இறங்கினான் ஒரு