பக்கம் எண் :

113

வரும் இவர்கள் தாரமங்கலம் அமரகுந்தி நகரங்களைத்
தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர். தொண்டை மண்டல வேளாளர்,
இளமன் கட்டி கட்டினதால் இளமீசுரர் கோயிலென ஒரு சிவாலயம்
தாரமங்கலத்திலிருக்கிறது. ஒளசல ராமநாத ராஜாவின் அரசியல்
ஆண்டு 14-20 (கி.பி. 1268; 1274) சாசனங்களும், 2-வது ஜடாவர்மன்
சுந்தரபாண்டியனின் (கி.பி. 1281, 1289, 1290, 1302) ஆண்டுகளின்
சாசனங்களும் இளமீசுரர் கோவிலிலிருப்பதால் சாசனகாலங்களுக்கு
முற்காலத்திலேயே, கட்டி முதலி சந்ததியிருந்து சிவாலயத்தில் பணி
செய்துள்ளார்களென்று விளங்குகின்றது. தாரமங்கலம் கைலாசநாதர்
கோயிலை மும்முடிக்கட்டி முதலியாலும், சீயால கட்டி முதலியாலும்
முறையே செய்யப்பட்டு வணங்கா முடிக்கட்டி முதலியால் வேலை முடிவு
பெற்றதாம். சேலம் ஜில்லா கோயமுத்தூர் ஜில்லாக்களில் பல கோயில்கள்,
குளங்கள், ஏரிகள், கோட்டைகள் கட்டி இருக்கின்றனர், தெய்வபத்தி,
அடியார்பத்தி, கல்விப்பெருக்கு, பொதுவகை உபகாரங்கள் முதலிய
நல்லறங்கள் பல இயற்றி வாழ்ந்தனர். இவர்களது பெண்பாலாரும்
இத்துறையிற்றலை நின்றுளர் என்பதைப் பவானி சங்கமேசுவராலய சாசனம்
காட்டும். திருச்செங்கோடு திருப்பணி மாலை 248-முதல் 261, வரையுள்ள
பாடல்கள் திருச்செங்கோட்டிற் செய்த தருமங்களைக் கூறுகிறது.

     கௌட சூடாமணி - வித்யாசமுத்திரம் எனப் பட்டப் பெயர் பெற்ற
ஸ்ரீகண்ட தேவனது தகப்பனாருக்கு நிலதானம் அமரகுந்தி, தாரமங்கலம்,
செம்மணிக்கூடல், கணபதி நல்லூர், செட்டிமாங் குறிச்சி, முப்பௌவை
சமுத்திரம், மூப்பசமுத்திரம், திருவெள்ளரைப் பள்ளியும், வணங்காமுடி
சமுத்திரம், இளமை சமுத்திர முதலிய கிராமங்களும் நிலங்களுந் தானஞ்
செய்துள்ளார்கள். எழுகரை நாட்டு வரியைக் கொண்டு சிதம்பரத்துள்ள ஒரு
சைவ மடம் நடை பெற்றதை விஜயநகரஞ் சதாசிவராயர் காலத்துச் சாசனந்
துலக்குகிறது. இவர்களது அதிகாரம், மும்மடித் தலைவாசல் கிழக்கு, கரூர்
தெற்கு, தாராபுரம் மேற்மிருந்தது. மதுரை சமஸ்தானத்துக்கு முக்கியமான 72
பாளயக்காரரில் கொங்கு மண்டலத்துக்குத் தாரமங்கலம் கட்டி முதலியார் -
சேந்தமங்கலம் இராமச்சந்திர நாய்க்கர் என்னும் இருவர்களாவார்கள். என
(Mr. F.J. Richards) சேலம் கஜட்டியரில் கூறுகிறார். மற்று ஒரு காலத்தில்
திருச்செங்கோடு தாலூகா கொக்கராயன் பேட்டை மிட்டா இரையமங்கலம்
தெற்கும், பவானித் தாலூகா அந்தியூர் மேற்குமாக இருந்தது.

     மதுரை விசுவநாத நாயக்கரின் மாதிரியைப் பின்பற்றியே
தலைக்கோட்டை யுத்தத்தின் பின்னர் 25 வருஷ காலம் கப்பங்கட்டும்