வரலாறு
:- இச்செய்யுளிற் குறிப்பிடும் அகத்துறைக் கோவைச்
செய்யுளொன்றுங் கிடைக்க வில்லை. புலவன் பெயரும் சொல்வாரில்லை.
அக் கோவையைக் கேட்டுப் புலவனது பல்லக்கைச் சுமந்து வயலும்
பொருளும் உதவியவனான உலடையான் என்னும் பெயர் உள்ள ஒரு
சாசனம், விஜயமங்கலம் நாகேசுர சுவாமி கோவிற்புறச்சுவரிலிருக்கிறது.
(No.
565 - 1905) ஸ்வஸ்திஸ்ரீ ...................... பாண்டிய தேவற்குத்
திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற .................. வது தைமாதம் குறுப்பு நாட்டு
விசயமங்கலத்து வெள்ளாழர் படைத்தலைகளில் (ந)ம்பி உலகுடையானேன்
விஜயமங்கலம் ஆன அவத்தூரில் நாயனார் .......................... ரமுடையாற்கு
வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கிந பணம் ........... ங்கைக்
கொண்டோமிக் கோயில் காணியுடை சிவ ............................ முதல் உத்த
................................. பதியனாகனுள்ளிட்டாரும் ...........................
பிறைசூடி அப்ப
......................... னுள்ளிட்டாரு மாடல ................ பிள்ளைழாழ்
வாழி .................
னும் குடம்கொண்டு கோயில் புகுவான் ................ வரை எரிப்பதாக இது.
பூந்துறை
வாரணவாசி
83.
|
வாரண
வாகன னோவென மன்னர் மனமதிக்குங்
காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யுஞ்சிரத் தாழப்பொருது வென்ற
வாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே |
(க-ரை)
வேந்தர்கள்; இவன் தேவேந்திரனோ வென்று மதிக்குங்
காரணம் பெற்றவனான வணங்காமுடிக் கட்டி முதலியும், தகுதிவாய்ந்த
அவன் முழுப் படைத் தொகையும் தலை கவிழுமாறு போர் செய்து வென்ற
வாரணவாசி யென்பவன் வசித்துள்ள பூத்துறையுங் கொங்குமண்டலம்
என்பதாம்.
வரலாறு
:- மேல்கரைப் பூந்துறை நாட்டுக்குத் தலைவன்
வாரணவாசி யென்பவன், இச்சதகத்தின் 56-ஆம் பாட்டிற் குறித்த குப்பிச்சி
என்பவனது வழித்தோன்றலாவன். நாட்டதிகாரிகள் சிலம்ப வித்தை பழகியும்
நாட்டுப்படை ஆக்கியும் வைத்திருப்பர். போர்த் தொழில் நன்கு
பயின்றிருப்பர். இக்கொள்கை 18-ஆம் நூற்றாண்டு வரையிருந்தது. பல
வகையிலும் வலிமையுள்ள வணங்காமுடிக்கட்டி முதலியை இவ்வாரணவாசி
வெற்றி கொண்டது விசாரிக்கத்தக்கது.
கட்டி
முதலி என்பது ஒரு குடும்பத்தின் பொதுப் பெயராக உள்ளது.
வேறு சிறப்புப் பெயர் சேர்ந்து ஒருவரைக் குறிக்க
|