பக்கம் எண் :

116

     வரலாறு :- படிக்காசுப் புலவர், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின்
சமஸ்தான வித்வானாகவிருந்து பின் தலயாத்திரையாகக் கொங்கு புகுந்தார்.
கவசை ஆறை நாட்டுள் (சர்க்கார் சாமக்குளம், கோயிற்பாளையம் யென்னும்)
*கவசை நகரிற் கல்வி கேள்விகளிலும் வள்ளன்மையிலுஞ் சிறந்த மசக்காளி
மன்றாடி என்பவன் புகழொடு வாழ்ந்தான். அவன் சமூகத்திற் றமிழ்ப்புலவர்
சபை ஒன்று கூடிற்று. அதில் வண்ணப்பாக்கள் சொல்வது என்ற வாதம்
நடந்தது. அதில் படிக்காசுப்புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை
என்று அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை, முன்பேசித்
தொடங்கிய சொற்படி கொங்குப் புலவர் பற்றிக்கொண்டனர் படிக்காசுப்
புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்துகொண்டு,

அஞ்சாலி மக்களுஞ் சாணாரும் பாணரு மம்பட்டருஞ்
செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்
பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்
நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே.

எனமனது சற்று நொந்தவராய்ப் பின் சித்த சமாதானஞ் செய்து கொண்டு
மெல்லமெல்ல நடந்தனர். கவசையினடந்த கவி வாத சம்பந்தமான
பகைமையாற் கொங்குப்புலவர் வைத்த சூனிய வித்தைத் தீமையில்
வருந்தித் திருச் செங்கோட்டுக்கு வந்தனர். ஸ்ரீ அர்த்த நாரீசுரர் மீது
வருகைப் பதிகம் பாடித் தேக சுகமடைந்து உமைபாகப் பதிகம் பாடிப்
பின் சமீபத்துள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக்
கோவை பாடி யரங்கேற்றிக் குமாரசாமிக் காங்கேயனாற் சன்மானமுற்று,

அந்திப் பிறைச்சடையரா வாசல ராலயத்திற்
கந்தப் பிரான்கதை கற்சிலை யாலமை காங்கெயரில்
விந்தைப் புயக்கும ரேந்திர வேந்து வியந்தெமக்குத்
தந்தச் சிவிகை கொடுத்தான் பெரும்புகழ் தாங்கினனே

எனப் புகழ்ந்து சோழநாட்டை அடைந்தனர்.

வேலைசூழ்பணி மாமலை வேலரும் விமலரு மகிழ் வெய்தச்
சீலமாகியோ ரைம்படி யரிசியுஞ் சிலகறி பருப்போடே
மாலை காவிரி மஞ்சனந் தீபமும் மனமிகு தயவாகிப்
பாலை சேர்மசக் காளிசெங் கோடரைப் பணிந்திவை யளித்தானே

(திருச் - திருப்பணிமாலை)


     *கவசையம்மன் கோயில் கவுசிக நதியருகு உள்ள ஓரூர்.