|
இவன்
இம்முடிப் பட்டம் பெற்றவன் என்பதை அடியிற்கண்ட
செய்யுள் வலியுறுத்துகின்றது.
(மேற்)
|
முன்னா ளுறைந்தைவரு
மரசர்பெரு மானுலகில்
முடிமன்னரிட தம்பிரான்
முதுமொழி குலோத்துங்க சோழனருள் செய்தனன்
முத்தமிழ்க் கம்பநாடன்
அந்நாளி லேபொன்னி கரைகள்கட வாதுள் ளடங்கவிசை
பாடலுக்கா
ஆதித்த னுள்ளளவு மழியாத வதுவைவரி யளித்தனர்க
ளன்றுமுதலாப்
பன்னாத நிலைமைசெறி கொங்குநாட் டினின் மேவு படிகார
வித்வச்சனர்
பங்கென நடந்துவரு படிதனக் கிடரதாய்ப் படித்தசிலர்
கைக்கொண்டதை
இந்நாளி லேகீர்த்தி நிலையாக விடுவித்தவ் வியல்வாண
ருக்களித்தான்
இங்கிதம தாகவரு கவசைநகர் வாழ்வுற்ற இம்முடி
மசக்காளியே
(தனிப்பாடல்)
|
இம்முடி
என இச்சதகத்து 54, 64-ஆம் செய்யுட்கள் குறித்த
மோரூர்க் காங்கேயர்களுக்கும், 69-ஆம் செய்யுட் கூறும் கோபண
மன்றாடிக்கும், 75-ஆம் பாட்டுக் குறிப்பிடும் காடையூர்க் காங்கேயர்க்கும்,
76ஆம் செய்யுள் விளக்கும் அல்லாளனிளை யானுக்கும் இம்முடி என்ற
பட்டப்பெயருண்டு. இம்மடி என்று கூறுவதையுங் காணலாம். தேச மன்னர்
குறுநில மன்னர், நாடு, ஊர் அதிகாரிகள், சில குருக்கள்களும் இம்முடி
என்று பெயர்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பெயரை மிகு
மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். இம்மடி (இம்முடி) என்பதன் பொருள்
இரட்டை அதாவது இரண்டாவதான். எனவே, இம்முடிக் குமார காங்கேயன்
என்றால் குமார காங்கேயன் என்பவன் ஒருவன் இருக்க, அவனுக்குப் பின்
மற்றொரு குமார காங்கேயன் வந்தால் அவன் இம்மடி (இரண்டாவது) குமார
காங்கேயனாகிறான். இன்னுமொருவன் தோன்றினால் மும்மடி (மூன்றாம்)
குமார காங்கேயனாகிறான். ஐந்தாம் ஜார்ஜ் சக்கிரவர்த்தி என்பதிலிருந்து
உய்த்துணர்ந்து கொள்க என்பது சாசன பரிசோதகர் கருத்து.
|