பக்கம் எண் :

120

     மடவளாக சிவாலய கர்ப்பக்கிரஹத்தின் வடபுறச் சுவரில்
வெட்டப்பட்டுள்ள சாசனம்.

                  கட்டளைக் கலித்துறை

சரங்கொண் டிலங்கை சமைத்தபெற் றான்றரி யாரிறைஞ்ச
உரங்கொண்ட காரைம னுத்தமச் சோழ னுபயபுய
மிரங்கும் படியரு ளான்மட வீரினி யென்னுயிரைக்
குரங்கின் கையிற்பட்ட பூமாலை யாக்குங் குளிர்தென்றலே.

எனக் காணப்படுகின்றது. பழய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமச்
சோழன் என்னும் பட்டப் பெயர் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்
வேந்தர்கள் தன் கீழுள்ள சிற்றரசர்களுக்கும் மந்திரி தந்திரிகளுக்கும்
தம்பெயரை விருதாகக் கொடுப்பது வழக்கம் சைவப் பெயர் வளர்த்த
சேக்கிழார் புராணச் செய்யுள் ஞாபகத்தில் வருகிறது.

அத்தகைய புகழ்வேளாண் மரபிற்சேக்கி ழார்குடியில்
     வந்தவருண் மொழித்தே வர்க்குத்
தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுத்
     தலைமை யளித்தவர் தமக்குத் தனது பேறு
முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று
     முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு
நித்தனுறை திருநாகே சுரத்திலன்பு நிறைதலினான்
     மறவாத நிலைமை மிக்கார்.

என்று சொல்லவவர் தமையழைத்தரச னிவரமைச்சரிவர்
                                    பட்டமும்
மன்றன் மாலைபுனை தொண்டைமானென வகுத்தபின்
                                றமதுமண்டலம்
அன்றுவற்கம்வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து
                           தொண்டைமண்டலம்
நின்று காத்தபெரு மாளெனத் தமது பெயரையெங்கும்
                                  நிறுத்தினார்.

இன்னை வகையிற் கூறி யினப்படை முற்றுங்காட்ட
மன்னனிவ் வீரனைப் போற் கண்டிலே மெனமகிழ்ந்து
கொன்னுற வழைத்து நாமங்* கொந்தகப் பெருமா                                     னென்றே
நன்னெறிப் பட்டங்கட்டி நல்கினான் பரிவட்டங்கள்.

(மெய்காட்டிட்ட திருவிளையாடல்)


     * திருநெல்வேலி ஜில்லாவில் கொந்தகை வேளாளரென ஒரு
வகுப்பினருளர்.