|  
             இவைகளால் 
        அரசர் மகிழ்ச்சிக்கு உரியரானவர்களுக்குத் தன்  
        பெயர் அல்லது கொள்வோரின் இனம் பற்றி பெயர், காரணமான பெயர்  
        முதலினவாகப் பட்டப்பெயர் கொடுப்பது விளங்குகின்றன. வேளாளர்கள்  
        மந்திரி தந்திரி சேனாதிபதிகளாக இருந்ததை, மானக்கஞ்சாற நாயனார்  
        புராணத்து "அரசர் சேனாபதியாம் விழுமிய வேளாண்குடி (எ) என்றும்,  
        வளவர் சேனாபதிக்குடியாம் பொன்னிநாட்டு வேளாண்மை யிலுயர்ந்த  
        பொற்பினது." (5) எனக் கூறப்பட்டுள்ளன காண்க.  
           இச்சதகத்தின் 
        51, 52, 53, 57, 66, 67, எண்களுள்ள செய்யுட்கள்  
        ஆணூர்ச் சர்க்கரையின் மரபினரைக் குறித்தன. இவர்களின் குல  
        முதல்வன் (மூலபுருஷன்) சர்க்கரை என்னும் பெயருடையவனாதலின்  
        பட்டத்துக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் இப்பெயரையும் உத்தமச்  
        சோழன் காமிண்டன் மன்றாடி என்று தனித் தனித் தம் முன்னோர்  
        பெற்ற விருதுப் பெயர்களையும் இணைத்து இட்டு வழங்கி வருகிறார்கள்.  
        மேற்குறித்த வண்ணமும் மற்றுஞ் சிறப்புகளைப் பெற்றது ஒருகாலத்து,  
        ஒருவராலன்று; வேறு காலத்து அக்குடியில் உதித்தோர் ஆவரெனக்  
        கொள்க. இப்பொழுது உள்ளவர் ஆங்கில அரசரால் ராயபஹதூர்  
        (Rai Bahadur) என்ற பட்டம் பெற்றபடி என்க. ஆணூர் (நத்தக்)  
        காரையூர் என்னும் இரண்டுஞ் செய்யுட்களில் இவர்களுக்கு உரியதெனக்  
        குறிக்கப்பட்டுள்ளன. பழையகோட்டை, நாட்டு வழக்கு.  
                            ஆகவ 
        ராமன்  
      
         
          |  
             88. 
               
               
               
               
               
           | 
          ஏய்ப்பொடு 
            மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்  
            கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே  
            வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்  
            வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே.  | 
         
       
           (க-ரை) 
        ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த  
        பாண்டியன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும்.  
        வேப்பமாலையும், மீனக்கொடியும் இன்னுந் தனக்குள்ள விருதுகளையும்  
        மகிழ்ந்து அளிக்க ஏற்றுக்கொண்ட சூரியகாங்கேயனும் கொங்கு மண்டலம்  
        என்பதாம்.  
           வரலாறு 
        : தனக்கு அடங்காது மீறி நடக்கும் ஆறகழூர் வாணனைத்  
        தந்திரமாகப் பிடித்துத் தன்முனிறுத்திய சூரியகாங்கேயனது வலிமையைக்  
        கண்ட பாண்டியன் மனது மகிழ்ந்து   
     |