பக்கம் எண் :

122

ஆகவராம பாண்டியன் என்ற தங்களது விருதுப் பெயரும், வேப்ப
மாலையும், மீனக்கொடியும் இன்னும் தனக்குள்ள விருதுகளையும் எழுகரை
நாட்டாதிக்கமுங் கவரவமாகக் கொடுத்து உபசரித்தனுப்பினன். அவைகளை
ஏற்றுக்கொண்டு கம்பீரமாக வாழ்ந்திருந்தனன். இந்நூல் 54-ம் செய்யுளை
இணைத்து நோக்குக.

               தக்கை ராமாயணம் பாயிரம்

                        (மேற்)

அவனுஞ் சடையன் காராளனவன்றனூரும் வெண்ணெய் நல்லூர்
இவனு நலதம்பிக் காங்கேயனிவன்ற னூருமோரூராம்
அவனுங்கண்ணன் சரராம னாகவராம னிவனுங் கண்ணன்
இவனு மவனைப்போ லுலகுதனில் ராமகதைதனைப் பாடுவித்தான்.

     இந்த ஆகவராம பாண்டியன் என்னும் பட்டம் பெற்றுள்ளதற் கேற்ப
ஆகவராமபட்டன் என்னுங் குடிப்பெயரோடு புலவர் குடும்பமிருக்கிறது.
ஆண்டு ஆண்டு சன்மானமும் கலியாணம் முதலிய நாட்களில் உரிமையான
வரியையும் இக்காங்கேயர்கள் சந்ததியாரிடத்துப் பெற்று வருகிறார்கள்.

          எழுகரை நாட்டதிகாரம் உடையார் என்பதற்கு
     
               மற்றும் உதாரணம்

உரமன் எழுகரை நாடன் கண்ணன் உபயகுல சுத்தவேளாளன்
திரமன் புகர்மோரூ ரத்தப்பன்சொல் செஞ்சொனலதம்பிக்
                                       காங்கேயன்
வரமன் புவியாளத் தென்னவர்க்கு மகுடஞ்சூட்டுகை க்குவமை
                                        சொல்லப்
பரமன் றிருமுன்னே பரதன் பின்னோன் பரிதிபுதல்வற்கு
                                  மௌலி வைத்தான்.

(அரசியற்படலம், தக்.ராமா)


மன்னனாகவராமன் வடகொங்கு மன்னியர் தினம்
                           வாழ்ந்திடு நாடு
தென்னவன்றரு மெழுபது தண்டிகை சேரும்பூந்துறை
                          நாடெங்கள் நாடே.

(மோரூர்ப்பள்ளு)