பக்கம் எண் :

123

                    கொங்குக்குயவன்

89.



கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு
மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்
பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட
மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) கரிகாலச் சோழன் மகளுக்கு நேர்ந்த பெரிய வலிப்பு
நோயை, ஒரு குலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச் சுட, அவ்வலிப்பு
நோய் தீர்ந்ததுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- கரிகாலன் என்னும் சோழன் மகளுக்கு வலிப்பு நோய்
வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தங்களால் இயன்ற வைத்தியஞ்
செய்துஞ் சற்றேனுங் குணமாகவில்லை. கொங்கு நாட்டிலிருக்கும் ஒரு
குயவன் இந்நோயை வெகு விரைவில் நீக்கு வானென்று பலர் சொல்லக்
கேள்வியுற்றான். நீ சூடு போட்டு வலிப்பு நோயை நீக்குவாயெனக்
கேள்விப்படுகிறேன்; ஆனால் என்னிளங் குழந்தை பொறாதே என்றனர்.
எம்மண்ணலே, அரசிளங் குமரியின் உறுப்பிற்படாது சூடுபோட்டு
நீக்குகின்றேன் என்றனன். அப்படியானால் செய் எனவே, மண்ணால்
இக்குழந்தைபோல ஒரு பாவை செய்தனன். அச்சுந்தரிக்கு வலி
எவ்விடத்திருக்கிறதோ என்பது தெரிந்து, அவ்வங்கக் குறி பார்த்து
நெருப்பிற்காய்ந்த இரும்புக் கோலால் அந்த மட்பாவையிற் சுட்டனன்.
அந்நோய் நீங்கிற்று.

     குறிப்பிட்ட பொருளில் உருச்செய்து அப்பாவையின் உறுப்பில்
ஊசி முதலியவற்றைக் குத்தல், சுடல் ஆன கருமஞ் செய்து, உண்டான
வியாதியை நீக்கல், இல்லாத வியாதியை உண்டாக்கல் ஆன தொழில்
செய்யும்முறை ஒட்டியம் சல்லியம் என்னும் மந்திர சாத்திரத்துக்
கூறப்பட்டிருக்கிறது.

     மேற்கண்ட நோய் தீர்ந்தது விக்கிரம சோழன் மகளென்றும்,
பொன்கலூர் நாட்டு வானவன் சேரி என்னும் ஊரில் இந்நிகழ்ச்சி நடந்தது;
குறுப்பி நாடு கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவன் அங்கு
வந்து குறி சுட்டான் என்றும் குயவர்களிடத்துள்ள பழைய ஒரு சுவடியிற்
குறிக்கப்பட்டுள்ளது.