பக்கம் எண் :

124

                    விசுவகன்மியர் சாசனம்

90.இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக்கொள்ள விரண்டுசங்கு
விருப்புற்ற வாழ்விலுஞ் சாவிலு மூத வெளிநடை காற்
செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்களென்னவச் செம்பியனால்
வரைப்பத் திரம்பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே.

     (க-ரை) குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும்,
நன்மை தீமைகளில் இரட்டைச்சங்கு ஊதவும், வெளியில் போகும்போது
காலுக்குச் செருப்புப் போட்டுக் கொண்டும் போகலாமென்றும்
இராஜகட்டளை பெற்ற கம்மாளரிருப்பதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- முற்காலத்தில் கம்மியர்கள் மேற்கண்டவைகளை
உபயோகிக்கக் கூடாதென்ற ஒரு வழக்கமிருந்ததைக் கோனேரி
மெய்கொண்டான் என்னுஞ் சோழன் நீக்கியிருப்பதாகக் கரூர்ப் பசுபதி
ஈசுரர் கோவிலுள்ள சாசனத்தால் தெரிகிறது.

     ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் ஸ்ரீ கோனேரின் மெய்
கொண்டான் வெங்காலநாட்டுக் கண்மாளற்கு 15-வது ஆடிமாதம் முதல்
தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை
உள்ளிட்டவை கொட்டுவித்துக் கொள்ளவும் தங்கள் வீடுகளுக்குச்
சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படி இவ்வோலை
பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு
வேண்டின இடங்களிலே கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்கொள்க.
இவை விழுப்பாதராயன் எழுத்து S, I. I. V. III. P. I. P. 47.
கோயமுத்தூருக்கடுத்த பேரூரிலு மிச்சாசனமிருக்கிறது.

                        காங்கேயன்

91.அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே
இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி னிசைத்தகலை
வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே