பக்கம் எண் :

126

யிர்த்தற்கியலாது துன்புறுவதைக் கண்டு வயற்றைப் பீறிக் குழந்தையை
எடுத்துச் சந்தோஷமுறச் செய்த மருத்துவி பிறந்து வளர்ந்த நறையூர் நாடு
சூழ்ந்தது கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- நீர்ச் செழிப்புற்ற நதியை அடுத்துள்ள ஸ்காந்தபுரத்
திலிருந்து இக்கொங்கு நாட்டை ஆண்டுவந்த வேந்தனது செல்வ மகள்
கருப்பமுற்றாள். சூன்முதிர்ந்து, மகப்பெறுவயற்றுவலிகண்டது.
அருமைவாய்ந்த பல மருத்துவச்சிகள் வந்தார்கள். தலை திரும்பி
விட்டது என்றார்கள். பொறுக்க முடியாது செல்வி வருந்துவதை அரசனும்
மற்றையோரும் தெரிந்து மனமயர்ந்தார்கள். பிண்டத்துக்குத் தலை சற்றுப்
பெரிதாக இருக்கிறது, சாதாரணமாக வெளிவராது, குழந்தையுந் தாயாரும்
இவ்வாபத்தினின்று மீள்வது அரிது என்று சிலர் சொன்னார்கள். சிசுவை
மாய்த்து எடுத்துச் செல்வியைச் தப்புவிக்கிலாமென்று சிலர் சொன்னார்கள்.
கற்பத்துள்ள குழந்தையையும் கற்பிணியான என் மகளாரையும் பிழைக்கச்
செய்வார் உளரேல் அவர்கள் விரும்பியவாறு பரிசளிப்பேன் என்று அரசன்
கூறினான். ஒருவரும் முன்வரவில்லை; என்றாலும் நறையூர் நாட்டினளான
ஒரு மங்கலை (கொங்கு நாவிதச்சி) ஆயுள் வேதத்திற் கைதேர்ந்தவள்.
அதிலும் பிரசவ நூலில் மிகுந்த அநுபவமுள்ளவள் முன் வந்தாள். வயற்றிற்
பிண்டமிருக்க ஒருத்தி மரணமுற்றால் வயற்றைப் பீறிக் குழந்தையை
எடுத்துத்தான் இடுகாட்டில் (கனனம்) அல்லது சுடுகாட்டில் (தகனம்) இடுதல்
மரபு. ஆதலின் கடைசிவரையில் இப்பிரசவத்தைப் பாருங்கள் ஒருவராலும்
முடியாது என்ற தீர்மானத்தில் நான் பார்க்கிறேன். அதாவது அடிவயிற்றைப்
பீறி வழி கண்டு சிசுவை எடுத்து ஈருயிர்களையும் வாழ்விக்கிறேன்,
என்றனள். கடைசியில் சம்மதித்தார்கள். இம்மருத்துவி பிரசவ
வேதனைப்படும் ராஜகுமாரியைப் பக்குவமாகக் கிடத்திச், சொற்ப நேரத்தில்
அடிவயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்துக்கொடுத்து பீறியவாயை
மூடித்தன்னிடத்துள்ள மருந்தைத் தடவினாள். மற்று ஏற்ற சிகிச்சை செய்ய
அரசமங்கை நினைவுற்றாள் அரசன் மகிழ்ந்து காங்கேய நாட்டில்
மங்கலைப்பட்டி என்னும் ஊரை இறையிலியாகக் கொடுத்தான் என்பர்.

     முற்காலத்து சாஸ்திர வித்தையிற்றேர்ந்த மருத்துவ மாதர்களி
ருந்தார்களென்பதை இதனாலறியக் கிடக்கின்றனது. இப்போதைய
மேலைத்தேச மருத்துவ சாஸ்திரிகளும் இவ்விதம் வயிற்றைப் பீறி
எடுத்துச் சிசுவையும் கருவுற்றாளையுங் காப்பாற்றுகிறார்கள் என்பதை
அடியிற் குறித்தவற்றாற் றெரியலாம்:-