*
மருத்துவ சாஸ்திரத்தில் கூறிய வண்ணம் அநேக காரணங்களால்
பூரண கர்ப்ப ஸ்திரியின் சிசுவை வெளியாக்கச் செய்யும் ஆயுத சிகிச்சைக்கு
(Caesarean Section) சிசேரியன் செக்ஷன் என்பது உண்டு. அது இரண்டு
விதம்.
1.
|
சிசுவை
வெளிப்படுத்தல் |
2.
|
சிசுவை
வெளிப்படுத்தி இனிக் கர்ப்பமடையாது கர்ப்பப்
பையைத் துண்டித்து விடுதல் |
இப்பொழுது
சிசுவை வெளிப்படுத்துதலைப்பற்றி யோசிப்போம்
சிசு
பிரசவ காலத்தில் சாதாரண வழியாய் இடமில்லாமல் பல
தடைகளால் நின்று விடும். அவை எலும்புகள் குறுகல், வழியைக்
குறுக்குங் கரணைகள். அதிக ரணத்தால் ஆறின வடுவு சுருங்கின தழும்பு
அங்கங்களை வேறுபடுத்தின சிசுவழியாய்ச் செல்ல மார்க்கமில்லாத தடைகள்
முதலியவைகளிருந்தால் (Caesarean Section) சிசேரியன் செக்ஷன்கள்
செய்யக் காரணங்களாகும்.
மேற்கண்ட
காரணங்களால் ஜீவனுள்ள சிசு வெளிப்படத்
தடையிருக்கும் பக்ஷத்தில் இந்த ஆப்ரேஷன் செய்ய வேண்டும்.
அநேகமாய் உள் அளவு நெருங்கியதும், தட்டையானமேல் வீஸ்சும்
இருக்கும் பக்ஷத்தில் சிசேரியன் செக்ஷன் செய்வதனால் சிசுவுக்கும்
தாய்க்கும் க்ஷேமமுண்டு.
பிரசவ
காலத்தில் சிது திடீரென்று இரத்தப் பெருக்கு வழியை
அடைத்துக் கொள்ளும் அடைமுதலிய கேசுகளை, ஆயுத சிகிச்சையினால்
நிவர்த்தி செய்து தாயும் சிசுவும் சுக ஜீவர்களாய் வாழ்ந்தார்கள் என்று
பிரசவ நூல்களில் கூறி இருக்கிறது. திருஷ்டாந்தம் ஆயுத சிகிச்சை
தீர்மானித்தபின் கர்ப்பப்பையை வேறாக்க மற்ற வியாதிகளில்லாத
பட்சத்தில் சிசுவை வெளியிடப் போதுமான ஆயுத சிகிச்சை செய்வது
தான் யுத்தமானது.
ஆயுத
சிகிச்சை ஆரம்பிக்க பிரதான செய்கை :- 36 மணி
நேரத்துக்குமுன் தாய்க்குப் பேதிக்குக் கொடுத்து, சிகிச்சைக்கு முன்
(Enema) எனிமா என்னுங் குடல் சுத்தி செய்து கர்ப்பிணிக்கு நன்றாய்
ஸ்நானஞ் செய்வித்து அசுத்த நிவர்த்தி செய்ய செவ்வீரம்
*
இதை அன்பு கூர்ந்து எழுதிவிடுத்தவர் ஸர்ஜன். ஸ்ரீமான் P.E.
முத்துக்குமாரசாமி முதலியாரவர்கள்.
|