கூட்டிய தண்ணீரில்
நனைத்த துணியால் மூடி படுக்கையில் சேர்த்துப் பின்பு
துணியை நீக்கிப் பிறுதல் வேண்டும்.
பிரசவ
நோய் ஆரம்பித்த பின்னும், பனிக்குடம் உடைகிறதற்கு
முன்னும் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு அநேகமாய் நடத்தி
வருகிறார்கள். காரணம், பிரசவநோயாற் கருப்பப்பை சுருங்கவும்
குறையவும் ஏதுவாவதுடன் கருப்பப்பையினின்று உண்டாகும் பிரசவ
அழுக்கு வெளிப்பட வழி பிரசவநோய் ஆரம்பித்த பிறகுதான்
விரியுமாகையால், பிரசவ நோய் உண்டானபின் இந்த வேலை செய்யத்
துணிகிறார்கள். ஆனால் இதில் ஒரு பெரிய இடையூறிருக்கிறதை மருத்துவ
சாஸ்திரி ஒருவர் தெரிந்து பிரசவ நோய் உண்டாகுமுன் ஆயுத சிகிச்சை
செய்யத் துணிந்தார். காரணம் அநேகமாயப் பிரசவ நோய் உண்டாகிறது.
இராக்காலம் சூரிய வெளிச்சமில்லை. கற்பிணி கடைசியாய் மாதவிடாயான
நாள் முதல் கணக்கிட்டு 280 நாள் அல்லது 40 வாரம் அல்லது ஒன்பது
மாதம் ஒரு வாரம் கடந்த பின்னும், ஏற்படுத்தின அளவு செய்யும்
ஆயுதத்தினால் அளவும் பருமனும் ஜீவஸ்திதியும் அறிந்தும் இன்னும் மற்ற
சின்னங்களால் தீர்க்கமாகத் தெரிந்து இதர ஆயுத சிகிச்சைக்கு
ஏற்படுத்துவதுபோல் அந்த சிசேரியன் செக்ஷனுக்கும் வசதியாய் நாள் மணி
குறிப்பிட்டுச் செய்வதனால் மிகவும் நல்ல காலமென்று துணிவு கொண்டார்.
இதுபோல் தற்காலம் சிலர் கையாடி வருகிறார்கள். இப்படி செய்வதற்கு
முன் பிரசவநோய் இல்லாதபடியால் கற்பப்பையில் வாயை அகலப்படுத்தி
அழுக்கு வெளிப்பட இடங்கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால்
இவ்வித முடிவு அநேகமாய் இடங்கொடுக்கிறதில்லை யாகையால்
சந்தர்ப்பம்போல் ஆயுத சிகிச்சை செய்வது தான் உத்தமம். முன்கூறிய
இரண்டுவித காலங்களில் பல மருத்துவ சாஸ்திரிகள் செய்த ஆயுத சிகிச்சை
சங்கைகளைக் கணக்கிட்டுப் பார்த்ததில் மொத்தம் 289 கேசுகளில் 82
பிரசவ நோய் ஏற்படுவதற்குமுன் செய்தது, இதில் மரணம் 1 பிரசவநோய்
உண்டான பின்னும் பனிக்குடம் உடைவதற்கு முன்னும் செய்த கேசுகள் 158
இதில் மரணம் 6. இரண்டு காலங்கழித்துச் செய்த மீதி 49 கேசுகளில்
மரணம் 6 - ஆம்.
சிகிச்சை
செய்யுமிடம்; கற்பிணியின் வயிற்றின் மத்திய பாகத்தில்
நேராய் 8 அங்குல நிகளமுள்ளதாய் மூன்றில் ஒருபங்கு தொப்பூழின்
மேலாகவும், இரண்டு பங்கு தொப்பூழின் கீழாகவும் வயிற்றைப் பீறிக் கற்பப்
பையையுங் கீறி சிசுவை இரண்டு காலைப் பிடித்துத் தூக்கிக் கடைசியாய்ச்
சிரசை வெளிப்படுத்தி, மற்ற சிசுவைச் சேர்ந்த வெளிப்படுத்த
வேண்டியவைகளை வெளி
|