பக்கம் எண் :

129

யாக்கிக் கற்பப்பையை முதலிற் கீறிய பாகத்தை ஒன்றோடொன்று
பொருத்தித் தைத்து அதன் நிலையில் விட்டு, பின்னால் கீறுபட்ட
வயிற்றை சாஸ்திரவிதியின்படித் தைக்கவேண்டும். அப்போது வயிற்றிலுள்ள
ஈரல் குடல்கள் குறுக்கிடாது. பீறும் பொழுதுங் குறுக்கிடாது. பின்னிட்டு
நான்கு மணிக்கு ஒருமுறை மருத்துவ சாஸ்திரி பிரசவித்த பெண்ணையும்
குழந்தையையும் பார்வையிட்டு, உபகருவிகளைக் கொண்டு அவுஷதங்களைக்
கொண்டு ரணஜன்னி முதலியவை பீடிக்காமற் பாதுகாக்க வேண்டும். கீன்றப்
பட்ட காயம் 7 - நாள் முதல் 10 - அல்லது 12. நாளிற் குணப்படும்.
குழந்தையும் தாயும் க்ஷேமமடையச் செய்கிற சிசேரியன் செக்ஷன் தற்காலம்
அநேக மருத்துவ சாலைகளில் நடந்தேறி வருகின்றன.

     இந்த மருத்துவச்சியை நறையூர் நாட்டினள் எனக் குறிப்பிடப்
பட்டுள்ளது. தாராபுரமுஞ் சில ஊர்களுஞ் சூழ்ந்த பாகத்தை நறையூர் நாடு
என்று வழங்கி வந்திருக்கிறார்கள்.

     1886-ம் வருஷத்தில் வெளியான சாசன பரிசோதனைப்புத்தகம்
(Vol. I. B. 127-ம் பக்கம் பழனி என்ற பாகத்தில்) கொங்கு மண்டலம்
நறையூர்நாடு வஞ்சிலாடபுர சீர்மையிற் வைகாபுரி நாட்டில் பழனி எனக்
குறிக்கப்பட்டுள்ளது. கொற்றனூர் சிவாலயத்தும், பழனிக்கடுத்த
பெரியாவுடையார் கோவிலிலும், விஜயமங்கலம் No. 582, 1905
சாசனங்களிலும் இப்பெயர் காணப்படுகின்றன.

     இராஜமா நகரமான ஸ்காந்தபுரத்தைப் பற்றித் தமிழ் நூல்களிற்
காணக்கிடைக்கவில்லை. கொங்கு ராஜாக்கள் தானஞ் செய்த
பட்டயங்களிலிருந்து ஸ்காந்தபுரமென்பது வெளியாகிறது. பூர்வ காலத்தில்
இங்கு வந்துபோன மேல்நாட்டுத் தேசஞ் சுற்றிகள் எழுதியுள்ள
குறிப்புகளில், நதிக்கரையில் நஞ்சை நிலத்தின் நடுவிலிருப்பதாகக்
குறிப்பிட்டுள்ளாராதலால் தாராபுரம் அல்லது கரூராக இருக்கலாம்.
தாராபுரத்தில்இடிந்த கோட்டை இருக்கிறது. கரூரை, ரோமாபுரி யாத்தீரிகர்
(Ptolomy) டாலாமி ராஜாங்கப் பட்டணம் என்று சொல்லி இருக்கிறார்.
கரூர் சோழர்களின் ராஜமா நகரத்தில் ஒன்றென்று பெரியபுராணம் நன்கு
தெரிவிக்கின்றது. இவ்விரு ஊர்களில் ஒன்று ஸ்காந்தபுரமானால்
ஸ்தலபுராணங்களும் சாசனங்களும் புலப்படுத்தாமற் போகா.

     கஜால் அட்டிக்குச் சமீபத்தில் ஸ்காந்தபுர மிருந்திருக்க வேண்டும்  
எனச்சொல்லப்படுவதால் நீலகிரித்தொடரில் குண்டா மலைத்
தொடரிற்றோற்றி வடக்கு நோக்கிச் சென்ற மாயாறு,