தூண்டினர், அவ்வாறே
செய்தனர். இதனை அறிந்த நாயனார் முருகன்
பூண்டி ஆலயத்தை யடைந்து திருப்பதிகம் பாடினர். பறித்த பொருளைக்
கொடுக்குமாறு சிவபெருமான் கட்டளையிட்ட படியே கோபுரவாயிலில்
கணநாதர்கள் குவித்தார்கள். ஒவ்வொரு தலங்களிலும் திருவிழாவில்
நடக்கும் வேடுபறி இந்த நிகழ்ச்சிதான் (இது ஆறை நாடு)
(மேற்)
மூடியசெஞ்
சடைவுடையீர் முருகவளம் பதியுடையீர்
கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல
தேடுமலை வளநாடு புரந்தருளுஞ் சேரலர் கோன்
பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்.
(திருவவிநாசிப்புராணம்)
|
கொடுகு
வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொத்தெனக்குத்திக் கூறைகொண் டாறலைக்கு மிடம்
முடுகுநாறிய வடுகர்வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடு மெத்துக்கிங்கிருந்தீ
ரெம்பிரானீரே.
(சுந்தரமூர்த்தி
நாயனார் தேவாரம்)
|
அவிநாசி
16.
|
பூவென்ற
சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை
யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
பிள்ளையைக் கொண்டு வாவென்று சுந்தரமூர்த்தி பதிகம்
பாட விழுங்கிய பிள்ளையைக் குளக்கரையில் முதலை உமிழ்ந்த
அவிநாசியையுடையது கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- திருநாவலூரர் என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார்
அவிநாசிக்கு எழுந்தருளிய பொழுது ஒரு வீட்டில் மங்கலவொலியும்,
அடுத்த வீட்டில் அழுகுரலுங் கேட்டது. மூன்று ஆண்டின் முன் சில
சிறுவர்கள் குளக்கரைக்குச் சென்றார்கள். ஒரு சிறுவனை முதலை
விழுங்கிவிட்டது. அச்சிறுவனுடன் சென்ற
|