வனுக்கு இன்று உபநயனம்:
அது மங்கலவொலி நம் குழந்தை இருந்தால்
உபநயனம் நடத்தலாமே என்று அவன் தாயார் அழுமொலி இது என
வன்றொண்டர்க்கு அங்குள்ளார் அறிவித்தார்கள். குழந்தையை இழந்த
தாயார் படுந்துயர் பெறாத நாயனார் அக்குளக்கரை சென்று "காலனைக்
குழந்தையைக் கொடுக்கச் சொல்" என்று பதிகம் ஓதியருளினார் - மூன்று
ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் சிறுவனை முதலை கரையில் கக்கிற்று.
(இது ஆறை நாடு.)
(மேற்)
உரைப்பாருரையென்
றுள்குறவல்ல ருச்சியின்மீதே
யொளிவிடு சுடரே
யரைக்காடரவா வாதியுநடுவு மந்தமுமளவு மல்லவுமானாய்
புரைக்காடவை சூழ்புக்கொளியூரா புகழவிநாசிப்
புண்ணியமுதலே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனை யென்றே
கட்டுரை செய்தார்.
(அவிநாசிப்புராணம்)
|
உரைப்பாருரையுகந்
துள்கவல்லார் தங்களுச் சியா
யரைக்காடரவா வாதியு மந்தமு மானாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூரவி நாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
(சுந்தரமூர்த்திதேவாரம்)
|
பேரூர்த்
தாண்டவ மூர்த்தி
17.
|
பாகான
சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொது நடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
கோமுனி பட்டிமுனி காண, மரகதவல்லி சமேதரான
பட்டீசுரன் நடனஞ் செய்தது மேலைச் சிதம்பரமான பேரூருங் கொங்கு
மண்டலம் என்பதாம்.
|