பக்கம் எண் :

140

     (க-ரை) நாளுந் தவம்புரியும் புண்ணியவான்கள் பொருந்த
வளர்ச்சியுற்றுக் குடிகள் நவநிதி பொருந்தப் பகைவர் வணங்க
இன்பமோங்க அவநிதன் முதலிய அரசர்கள் வடநாட்டையும் வென்று
மகுடம் புனைந்து அரசு புரிந்து புகழ்கொண்டது கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- அவநிதனாதியரசர் என்றிருப்பதால் அவநிதன்,
கொங்கணி, பிரதிவி கொங்கணி முதலிய கொங்கு அரசர்கள் ஆம்.
கேரளத்தைச் சார்ந்த பொன்னாடு முதலிய ராஜ்ஜியங்களை அவநிதன்
என்னும் அரசன் வென்று ஆண்டிருக்கிறான். கொங்கணி என்னும்
அரசன் 5-வது நூற்றாண்டில் தானம் செய்த நிலம் வடக்கே நந்தி
துர்க்கத்திலிருக்கிறது. 6-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் அவநிதன்
தானஞ் செய்த நிலம் அதன் வடக்கிலும், 8-வது நூற்றாண்டில்
துங்கபத்திரைக் கரையிலுள்ள ஊரில் பிரிதிவி கொங்கணியின் தான
நிலமிருப்பதால் அதுவரை கொங்கு ராஜாக்கள் வென்று
ஆண்டிருக்கிறார்கள் என்பது நன்கு விளங்குகிறது. சங்க நூல்கள்
கொங்கு, கொங்கர்கள் என்றும், சேரர் கேரளம் என்றும் வேறு பிரித்துக்
கூறுகின்றன. கொங்கு அரசர்கள் கேரளத்தை வென்றதும், கேரள வேந்தர்
கொங்கு நாட்டை வென்றதும் அங்கங்கு கூறப்பட்டுள்ளன. பல நாடுகளை
ஒரு அரசன் ஆண்டுமிருக்கிறான். இது மாறி மாறி வருவதுண்டு. கேரள
அரசருக்குத் தலைப்பட்டணம் கள்ளிக்கோட்டை, வஞ்சி, கொங்குக்குத்
தலைப் பட்டணம் ஸ்காந்தபுரம் - தவலனபுரம் அல்லது குவலாலபுரம்
என்றுங் காணப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டில் சோழவேந்தர்கள்
வெற்றிபெறுகிற வரையில் இந்த ஸ்காந்தபுரத்திலிருந்துதான் அவநிதன்
முதலிய கொங்கு அரசர்கள் புகழோங்கி வாழ்ந்தார்கள்.

     பொன்னாடு முதலிய சேராச்சியத்தைக் கட்டி யாண்ட அவநிதன்
என்னும் அரசன் எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறு நூறு மருதம் -
க - வேட்கைப் பத்து கூறும் அவிநி என்பவனானவன் என்போர் கூற்று
காலத்தோடு ஒக்குமாயின்,

                 (மேற்)

வாழியாதன் வாழியவினி
நெற்பல பொலிக பொன்சிறிது சிறக்க
வென வோட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வெனவேட் டோமே.

     இவ்வேட்கைப் பத்து ஒன்று முதல் 10-பாக்களும் முதலடி
ஒவ்வொன்றும் வாழியாதன் வாழியாவினி என்றே நிலவுகின்றன.

     கொங்குமண்டல சதக மூலமும் உரையும் முற்றிற்று.