|  
             கம்பர் 
        காலம் முதல் தற்காலம் வரையில் கொங்குநாட்டில்  
        கம்பருக்கு மிகுந்த செல்வாக்குள்ளது. கொங்குவேளாளர் வீட்டுத்  
        திருமணங்களில் மங்கலர்கள் கம்பருடைய மங்கல வாழ்த்து பாடுதலும்,  
        நாட்டுப் புலவர்கள் கம்பருடைய திருமணவாழ்த்துப் பாடுதலும், இன்றும்  
        நிகழக் கூடியவைகளாகும்.  
           கம்பர் 
        சடையனையும், அவன் மரபினோரையும் உயர்த்திப் பாடிய  
        செய்தியொன்று இந்நூலில் வரும் 'பார்த்திபன் கங்கையில்' என்னும்  
        தலைப்புடைய செய்யுளிலிருந்து தெரிகின்றது.  
           அவ்வரலாறு 
        :- குளித்தலையில் சேர, சோழ, பாண்டியமன்னர்களும்,  
        வேளாளர்களும் பார்த்திபகங்கை யென்னுமிடத்தில் கூடியிருந்தனர். காவிரி  
        பெருக்கெடுத்து வந்தது. அப்பொழுது குலோத்துங்க சோழன் தனக்குரிய  
        காவிரியின் பிரவாகத்தைப் புகழ்ந்து கூறினான். சோழனுடைய  
        இறுமாப்பையறிந்த கம்பர், 'இக்காவிரி நீர் சடையன் மரபினராகிய வேளாளர்  
        வீட்டு விருந்தினர்கள் விருந்துண்டு கை கழுவும் எச்சில் நீர்" என்னும்  
        பொருளமைந்த வெண்பாவொன்றைப் பாடினர். அதனைக் கேட்ட சோழன்  
        கம்பர் மீது சினங்கொண்டான். அப்பொழுதே கம்பர் காவிரியில் சோற்றுப்  
        பருக்கையுடன் மேலே மிதந்து வரும் வாழையிலைகளைக் காட்டித் தான்  
        கூறியதனை மெய்ப்பித்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த வேளாளர்கள்  
        தம்புகழை உயர்த்திக்கூறி மெய்ப்பித்த தெய்வப் புலவராகிய கம்பரை  
        வியந்து பாராட்டியதுடன் அக்காலத்து முறைப்படி மாத்தெளித்துச் சத்தியம்  
        செய்து கம்பருக்கு அடிமையுமாயினர். இவ்வரலாற்றைக் கம்பர் பாடிய  
        'திருக்கை வழக்கம்' அறிவிக்கின்றது. 
      
        
          | 
             "நாவிற்புகழ்கம்ப 
              நாடற்கடிமையென்றே  
               மாவைக்கரைத்து முன்னே வைக்குங்கை"  
            -திருக்கைவழக்கம் 
               
           | 
         
       
      கம்பருக்கு அடிமைபுகுந்த 
        வேளாளரிற் சிலரை இந்நூல் கூறுகின்றது.  
        அவர்கள், செம்பகுலாதிபனாகிய அமராபதியும், வெண்டுவகோத்திரத்துத்  
        தீத்தனும், வண்ணக்க கோத்திரத்து நல்லவனுமாவர். இந்நூல் கூறும்  
        கம்பரைப் பற்றிய செய்திகள் நூலாசிரியர் காலத்தில் நிகழ்ந்த  
        நிகழ்ச்சிகளாதலின் முற்றும் உண்மையேயாம் என்பதில் ஐயமில்லை.  
           கார்மேகக் 
        கவிஞர் பாடிய கொங்கு மண்டல சதகம். இதனுடன்  
        தொடர்புடைய மற்றொரு வரலாறு கூறுகின்றது. முன்பு கூறிய காவிரியின்  
        பிரவாகம் கரைகளையும் வயல்களையும் அழித்து   
    
   |