கார்மேகக்
கவிஞரின் கொங்கு மண்டல சதகப் பதிப்பாசிரியராகிய
வித்துவான் தி. அ. முத்துசாமிக் கோனாரவர்கள் இந்நூலின்கண் உள்ள
சிலபாடல்களை யெடுத்துத் தாம் பதிப்பித்த கொங்கு மண்டல சதகத்தின்
முன்னும் பின்னும் இடையிலுமாகச் சேர்த்துள்ளனர். ஆசிரியர் பெயர்
கூறாமல் அவர் செய்த பாடல்களையும் வேறொருவர் செய்த நூலில்
சேர்த்தது கோனாரவர்கள் அறிந்து செய்ததே.
இந்நூலைப்
பிரதி செய்தல் முதலியவற்றில் எனக்கு உதவியாயிருந்தவர்
எனது அன்பிற்குரிய வித்துவான் திரு. செ. இராசு என்பவர்.
என்னுடைய
இளமைக் காலத்தில் கொங்கு மண்டலத்தில் சைவ
மணங்கமழும் ஞானத் தமிழ்ப் பூஞ்சோலையாகிய பேரூர்ச் சாந்தலிங்க
சுவாமிகளின் திருமடத்தில் எனது வலக்காலைத் தூக்கி வைத்து மாசி
மகக் குருபூசைப் பெருவிழாவில் ஸ்ரீ ஜகத்குரு வீரசுப்பைய
ஞானதேசிகேந்திர பரமாச்சாரிய சுவாமிகளின் தலைமையில் என்னைப்
பேசுவித்துச் சுவாமிகளின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என்னை
உரியவனாகுமாறுசெய்தவர், அக்காலத்தில் சாந்தலிங்கர் மடத்தின்
அதிபராயிருந்த தவத்திரு. மாணிக்க சுவாமிகள் ஆவார்கள்.
அவர்களின் நினைவுக் குறியாக இந்நூலை வெளியிடுகின்றேன். என்
வேண்டுகோளையேற்றுத் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்
கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியிடுவதற்கு அனுமதி தந்த கல்லூரித்
தலைவர், துணைத் தலைவர் முதலாயினோருக்கு எனது மனங்கலந்த
நன்றியும் வாழ்த்தும் யாண்டும் உரியதாகட்டும்.
வேலம்பாளையம்
(அ-ல்) |
வித்துவான் |
எழுமாத்தூர்
(வழி) |
வே.ரா.
தெய்வசிகாமணி
|
ஈரோடு,
(வட்டம்) |
29-11-'70
|
|