பக்கம் எண் :

168

        சிவலிங்கத்தின் திருமேனி வியர்த்தல் - பேரூர்

(22)



நீலங்கொள் மேனி த்திருமா லயனன்று நின்றிரந்த
காலம் பலகண்ட பேரூரில் மேவுங் கனகமன்றில்
ஆலம்பருகு நடராய ராட வரசவன
மாலிங்க மேனி வெயர்வூற் றுதல்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) பேரூரில் கனகமன்றில் ஆலம்பருகிய நடராசப்
பெருமான் அரசவனத்தில் ஆடிய வரலாறு பேரூர்ப் புராணத்தில் நிருத்தப்
படலத்தில் அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளது: பேரூரிலே காலவ முனிவர்
முதலியோர் சிவபிரான் திருநடனத்திற்காகக் குறித்த காலத்தையே
நாடிக்கொண்டிருந்தனர். அங்ஙனம் இருக்கும் பொழுது காலவேச்சுரத்தில்
அரசடியில் வெள்ளியம்பலம் உள்ளதாகச் சிவபெருமான் அருளியபடி
அதனைக் காணப் பெற்றிலேன் என்று கோமுனிவர் தியானித்தார். 'பழைய
அம்பலத்திடத்துச் சபையும், நடராஜர் திருவுருவம் அமைத்து வழிபடுக.'
என அசரிரீ எழுந்தது. ஆயினும் கோமுனிவரால் அவ்விடத்தைக் காண
இயலவில்லை. சிவபெருமான் சித்தராக வந்து அற்புதங்களைச் செய்தார்.
கோமுனிவர், சிவபிரானின் திருச்சபையைக் காட்ட வல்லவராயின் நீவிரே
முற்றுமுணர்ந்த பெற்றியர் என்று சித்தரிடம் கூற, உடனே சித்தராய
சிவபெருமான் அரசடி நிழலில் வந்து 'இரசதசபை எழுக' என்றார்.
வெள்ளியம்பலம் தோன்றியது. சிவபெருமானை அனைவரும் வணங்கிச்
தெய்வசபைக்கு ஏற்பத் திருவுருவம் அமைக்க வேண்டினர். திருநடராசர்
திருவுருவோடு காட்சிதந்தனர். பங்குனி மாதத்து உத்திரத்தன்று
இரசதசபைக்குப் பெருமான் எழுந்தருளி முனிவர்களும் தேவர்களும்
வணங்கித் துதிக்கத் திருநடனம் செய்தார். திருவடிக்கண்ணதாகிய
மறைச்சிலம் பொலியும் வாத்தியங்களும் செவிப்புலப்பட்டனவன்றி,
திருநடனக் காட்சி கட்புலப்படாமையால், ஆங்கு நின்ற அனைவரும்
ஏங்கி இரந்து துதித்தனர். துதித்த மாத்திரையில், ஊனநடனம் செய்து
எவ்வகை உயிர்கட்கும் ஆணவமலவலியை மாற்றி ஞானநடனம்
செய்தருளும் பான்மையைக் கண்களாற் கண்டு மகிழ்ந்தனர். சிவபெருமான்
செய்தருளிய நாடக வேகத்தினால் ஆபரணமாக அணிந்த பாம்புகள்
விடத்தை உமிழ அது புலித்தோல் போர்த்தாற் போலத் திருமேனி
முழுவதும் வரிவரியாக ஒழுகியது. அவ்விட வெப்பத்தினால்
தேவர்களஞ்சினர். உமாதேவியார் அன்ன பூரணியை உண்டாக்கிப் பசியைத்
தணித்தனர்.