பக்கம் எண் :

167

     (கு - ரை) அவிநாசித் தலத்தில் சுந்தரர் பதிகம் பாடி, முதலை
விழுங்கிய பிள்ளையை மீட்ட செய்தியினைத் தேவாரப் பதிகத்தினுள்ளும்
காணலாம்.

               காசி தீர்த்தம் - அவிநாசி

(18)விரிபுன லாகிய கங்காநதி விசுவேசர் சொல்லாற்
புரையுறு பூமிக்குள் வந்தா லயத்தொரு பூஞ்சுனையாய்த்
திருவவி நாசியி லீசற்குக் காசியிற் றீர்த்தமென
மருவபி டேகத்துக் கானது வுங் கொங்குமண்டலமே.

                       சுந்தரர்

(19)கோவாய்க் கருணைசெய் வாரணவாசி கொழுகொம்புதந்
தாவாய்க் கருணை தனைவலப் பாகந் தரித்துநின்று
மூவாண்டு சென்ற முதலைதன் வாய்ப்பிள்ளை முன்னழைத்து
வாவாவென் றோதிய சுந்தரர் வாழ்கொங்குமண்டலமே.

     (கு - ரை) காண்க கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 16

          கூப்பிடு பிள்ளையார் - திருமுருகன்பூண்டி

(20)கருவா முதலையின் வாய்ப்பிள்ளை மீட்டுக் கருணையுடன்
அருகூர் திருவவி நாசிப்பெம்மானுக் கறிக்கைசெய
முருகீசர் சுந்தரர் கையிற்பறித்த முறைகொண்டெதிர்
வருகூப் பிடுவிக்கி னேசுரர் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) காண்க கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 15

                நண்ணாவூர் - இலந்தை மரம்

(21)அருந்தவ மாமுனி வோர்களுந் தேவரு மன்புடனே
நிரந்தரமாகத் தொழுமால யத்துக்கு நித்தநித்தம்
திருந்தும் பரம சிவன்பூச னைக்கொரு தென்னிலந்தை
மரங்கனி யீவதும் நண்ணாவூர் சூழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) காண்க கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 14