பக்கம் எண் :

166

                  புக்கொளியூர் அவிநாசி

(16)



கொந்தவிழ் கூந்தல் உமையாளும் பூமலர்க் கொன்றையனும்
நந்துவயல் அவிநாசியுள் ளாரும் நலமுடனே
சிந்துபிரளயங் கொள்காலம்சென்றொழிந்தே திரும்பி
வந்துபின் புக்கொளியானதுங் கொங்குமண்டலமே.

     (கு - ரை) நந்து - சங்கு, நந்துவயல் - சங்குகளையுடையவயல்
மேம்பாடுடைய வயல் எனினுமாம். புக்கொளியூர், அவிநாசி என்பதன்
பெயர்க்காரணம் அவிநாசித்தலபுராணம் தல உற்பத்திச் சருக்கத்தில்
கூறப்பட்டுள்ளது.

     சிவபெருமான் பிரளய தாண்டவம் செய்த பின் அக்கினி
தாண்டவம் செய்தார். நெருப்பு வடிவாக ஏசுநாதன் சங்கார தாண்டவத்தைச்
செய்தபோது திருமால், நான்முகன் முதலிய தேவர்கள் அனைவரும் புக்கு
ஒளித்த இடம் ஆதலால் புக்கொளியூர் என்று பெயர் உண்டாயிற்று.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தகுந்தழலின் வடிவாகி யேகநாதன்
சங்கார தாண்டவம் ஆதரித்தஞான்று
முகுந்தன் அயன் முதலான மூர்த்திபேதம்
முப்பான்மேல் முக்கோடி முற்றும் தன்பால்
புகுந்து ஒளித்த தானம் இதுஎன்று அருள்கையாலே
புக்கொளியென்று உயர்நாமம் பொலியுமன்றே.

(தலஉற்பத்திச் சருக்கம் - 19)

     முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் ஞானநடனம் செய்து
பரமானந்தத்தை விளைவிப்பதாகிய அதிசயம் நீங்காமல் என்றும்
எக்காரணத்தாலும் அழிவு வாராமல் இருப்பதால் அவிநாசி என்ற பெயர்
உண்டாயிற்று.

                   அவிநாசிலிங்கம்

(17)



தேசமெல் லாம்பணி யும்மவி நாசிச் செழும்பொய்கையூ
டாசின் முதலையின் வாய்ப்பிள்ளை மீள வதிசயமாய்
வீசுகங் காநதி சூழ்காசி லிங்கத்தின் வேர்கிளைத்து
மாசணு காலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.