ஆத்தி, கொன்றை,
பஞ்சவில்வம் முதலிய மரங்கள் அடர்ந்துள்ள
காட்டைக் கண்டார். அரும்புகள் அலர்ந்த பஞ்சவில்வத்தின் அருகு சார்ந்து
ஞானச்செல்வி நின்றருளினார் அவ்விடத்திலேயே அமர்ந்து தவஞ்செய்தார்.
'தாயான
கருணை அபிராமி வாமிதவம் முடிந்து
நிட்டைபெறு சமாதி நீங்கி
மாயாத பஞ்சஇதழ் வில்வம்ஆதி வனமலர்கள்
பலவெடுத்து வடித்து மேன்மை
ஓயாத சிவகங்கைப் புனலும்ஏந்தி உபசாரசோடசமும்
ஒழியாது ஆற்றி
ஆயாத முதுமறை ஆகமநூல் சொல்லும் அவ்வழி
பூசனைமுடித்தாள் அகிலம் வாழ'
(அவிநாசித்
தல புராணம் - தலஉற்பத்திச் சருக்கம் - 31)
|
அவிநாசியில்
பரந்த நிழல் செய்வதோடு பூசைக்குப் பத்திரங்களையும்
தருவன பஞ்சவில்வ மரங்கள். வில்வம், நொச்சி, விளா, கிளுவை, குருக்கத்தி
ஆகியவை பஞ்சவில்வம் ஆகும்.
திரிசூலப்பனை
(14)
|
கடலேந்திய
உலகெல்லாம் அறியக் கனகபுறத்து
உடலேந்தி ஏறும்அவர்க்கு இன்பமாய்க்கள்ளும் ஊறிக்கொண்டே
அடலேந்து சூலம்எனவே புனைந்துகொண்டு அண்டம்முட்ட
மடலேந்தி யோர்பனை வாழ்வதுங் கொங்கு மண்டலமே, |
(கு
- ரை)
கனகபுரத்தில் உள்ள பனைமரம், ஏறுவோர்க்குக்
கள்ளையும் கொடுத்துக் கொண்டு திரிசூல வடிவில் மடல்களையும்
கொண்டுள்ளது. பனைமரம் ஏறும்போது உடல் ஏந்தி ஏறுவது முறை.
காவிரி
நட்டாற்றீசுவரர்
(15)
|
பாயப்
பெரும்புனல் எங்கெங்கும் சென்று பரந்து பொங்கித்
தேயப் பலர்தொழும் காவேரியாறு சிகரத்தின் மேல்
தோயப் பெருகினும் நட்டாறையீசுரர் சூழ்மண்டப
வாயிற் படியில் புகுதாதுவுங் கொங்கு மண்டலமே |
|