(க-ரை)
சுந்தரமூர்த்தி நாயனார் வருவதைத் தெரிந்து (பள்ள வடிவாக)
வயலில் ஒளிந்திருந்ததை நந்திகேசுரர் காட்டச், சினந்த பட்டீசப்பெருமான்
திருக்கையிற் கொண்ட மண்வெட்டியால் வெட்டிய முகம் மறுபடி வளர்ந்த
பேரூர் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு:-
பட்டிப்பெருமான் பள்ள வடிவு கொண்டு வயலுக்குப்
போகும்பொழுது சுந்தரருக்கு என் இருக்கையைத் தெரிவிக்காதே என்று
கட்டளையிட்டுச் சென்றனர். சுந்தரர் சுவாமி எங்கே எனவே, கட்டளையை
மீறுவதும், அடியாரிடத்துப் பொய் கூறுவதுந் தவறென்று கண் சாடையாற்
காட்டினார். தெரிந்த வன்றொண்டர் வயலுட்சென்று பெருமானை
வணங்கினர். நாயனாருடன் கரையேறிய பட்டிப்பெருமான் ஆலயத்துட்
சென்று மண்வெட்டி கொண்டு இடப தேவர் முகத்தை வெட்டினர்.
நந்திகேசுரர் வணங்க முகம் வளர்ந்தது. (இது ஆறை நாடு கோயம்புத்தூரை
அடுத்துள்ளது.)
(மேற்)
பண்ணையி லேரிற்
பூட்டிப் பகட்டொடு முழாது வைத்தால்
நண்ணிய தொண்டர்க் குண்மை நவிற்றுறா திருப்பை கொல்லென
றண்ணல்வெள் விடையைச்சீறி யானனஞ் சரிந்து வீழ
மண்ணகல் கருவி தன்னல் வள்ளலார் துணித்திட் டாரால்
(பேருர்ப்புராணம்)
|
அகத்திய
முனி
20.
|
வாதாபி
வில்வல னான துணைவர் மடியவிசை
தீதாற வேகும்ப சம்பவ னன்று சிவக்குறிகண்
டேதாளி லர்ச்சனை செய்து தொடர்பவ மேகமகிழ்
மாதா மதர்நிறை சூழ்தான முங்கொங்கு மண்டலமே
|
(க-ரை)
வாதாபி வில்வல னென்னும் இரண்டு அசுரர்களும் மடியச்
செய்த பாவம் நீங்கும் பொருட்டு அகத்திய முனிவர் சிவலிங்க பூசை
செய்தது கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு:-
அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வருங் காலத்தில்
வாதாபி, வில்வலன் என்னுந் துணைவர் இருவரும் முனிவரை வரவேற்று,
அமுது செய்தருளும்படி வேண்டினர் வாதாபி ஒரு செம்மறிக் கடாவானான்.
வில்வலன் அக்கடாயைச்
|