பக்கம் எண் :

18

சேதித்துப் பக்குவஞ் செய்து படைத்தனன். முனிவர் உண்டனர்.
வழக்கம்போல வில்வலன் அடாவாதாபி எனக் கூவினன். வயற்றின் சுழற்றல்
நேரிடும்போதே இது அசுரர்கள் மாயவித்தை என அறிந்து மந்திரத்தைச்
சபித்துத் தன்வயற்றைத் தடவினர். வாதாபி ஜீர்ணமாய் விட்டான். வில்வலன்
திடுக்கிட்டு முனிவரைக் கொல்லும் பொருட்டு நெருங்கினன். ஒரு தருப்பைப்
புல்லை விட்டு அவனை மாய்த்தனர். உடனே அக் குடகு நாட்டை நீங்கிக்
கொங்கு நாட்டுக்கு வந்து மேன்மை பொருந்திய சிவலிங்கப் பெருமானைக்
கண்டு பூசித்த ஒரு பிரமஹத்தியையும் போக்கிச் சுகப்பட்டனர். துடியலூரிற்
பூசித்ததாகத் துடிசைப் புராணம் கூறுகிறது.

               (மேற்)

ஆசில் கொங்கினுக் கணித்தி னோரிடை
வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
ஈச னார்தமை யிலிங்க மேனியி
னேச நெஞ்சினா னினைந்து தாபித்தான்

மங்கை பாகனை மற்றும் பிற்பகல்
சிங்க லின்றியே சிறந்த பூசைசெய்
தங்கண் மேவினா னவன்க ணாகிய
துங்க வெம்பவந் தொலைந்து போயதே.

(காந்தம் - காவிரி நீங்கு படலம்.)


தவநெறி யிடைவிடாச் சரத மாமுனி
பவமறு துடிசையம் பதிபுக் காங்கமர்
சிவபெரு மானையுந் தேவி தன்னையும்
உவகையி னொடு தொழு தொருங்குற் றானரோ

(துடிசைப் புராணம்)

      துடியலூர் - சுந்தரருக்கு விருந்து செய்தது

21.வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியளங்
காட்டு முருங்கை யிலைகாய் நெய் பெய்து கறி சமைத்துப்
பாட்டு முழக்குவன் றொண்டருக் கன்னம் படைத்து நரை
மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே.