அகத்தீஸ்வரம் என்பது
அதன் பெயர். அதனையடுத்து ஓர் சிறிய
மலையுமுள்ளது. காமதேனு வெள்ளியங்கிரி மலையிலிருந்து பேரூருக்கு
வரும்பொழுது வழியிலுள்ள சிவலிங்கங்களைத் தரிசனம் செய்து கொண்டு
வந்தது. அப்பொழுது அகத்தீசரையும் தரிசனம் செய்து கொண்டு வந்ததாகப்
பேரூர்ப் புராணம் கூறுகின்றது.
"தங்கியவாகீசுவரர்
அகத்தீசர் தக்கானீசுவரர் தீர.....................
தாலேசுவரரையும் தொழுது தாழ்ந்ததுவே" - பேரூர்ப்புராணம்
(காமதேனு வழிபடுபடலம் 70.) ஆதலால் அகத்தியர் பூசித்த சிவலிங்கம்
தொண்டாமுத்தூரையடுத்துள்ளதெனத் தெரிகிறது.
ஆசில்
கொங்கினுக் கணித்தி னோரிடை
வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
ஈச னார்தமை யிலிங்க மேனியி
னேச நெஞ்சினா னினைந்து தாபித்தான்
(கந்தபுராணம்
- காவிரிநீங்கு படலம்)
|
இவற்றால் கொங்கு
நாட்டிலுள்ள தொண்டாம்புத்தூர் மலைமீது அகத்தியர்
தங்கியிருந்தாரென்பது துணிவாகின்றது.
பிரமனைச்
சிறைவிட்டது - திருவாவினன்குடி
(27)
|
கொண்பயி
லுந்திரு வோங்கார நற்பொருள் கூறச்சொல்லி
யன்புடன் கேட்கச்சொல் லாமையி னாலன்று காவலிட்டுப்
பொன்பயில் செய்யசெந் தாமரை வேதனைப் பூட்டியகால்
வன்சிறை விட்டதும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே |
இடும்பன்
கொணர்ந்த சிவகிரியில் முருகன்
(28)
|
பூவடி
தன்னில் வருகின்ற ராமர் புகலிடமாங்
காவடி கொண்டு மிடும்பா சுரன்வரக் காரணமாய்த்
தாவடி வாழ்சிவ கிரியா வினன்குடி தான்றழைக்க
மாவடி சூழ்ந்த வரன்மகன் வாழ்கொங்கு மண்டலமே. |
|