பக்கம் எண் :

178

     "ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா மண்டலேசுவரன் ராயர் மாகராயர் தேவராயர்
உடையார் குமாரர் அவருடைய உடையாருக்குச் செல்லா நின்ற சர்வதாரி
u தை மாதம் (25) தேதி காங்கய நாட்டு நாட்டவர் எங்கள் நாட்டில்
பாற்பதி ஊருடைய நாட்டார் உடையார் பச்சோடவுடையாருக்கு" என்பது.
இத்தலத்தைப் பற்றிய மடவளாகத் தலபுராணம் பாடியவர் இத்தலத்தில்
வாழ்ந்த முத்தமிழ் விநோதராகிய இலக்குமண பாரதியார் என்பவர். 200
ஆண்டுகளின் முன்பு வாழ்ந்தவர்.

              நண்ணாவுடையார் உலகுடையார்

(48)தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

                 சேரனுக்கு முடிசூட்டுதல்

(49)நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

         பசும்பை யெழுபது கொங்கு வைசியவேளாளர்

(50)பார்புவி தன்னி லளகா புரியும் படைத்தவர்கள்
காரண மார்கொங்கு மண்டலத் தாருயர் காவிரியில்
ஏருறு வானும் பசும்பை யெழுபது மேற்றவர்கள்
வாரி வசியருங் காராளர் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு-ரை) பசும்பையெழுபது - வைசியருடைய பை முதலிய
கருவிகளைச் சிறப்பித்துப் பாடிய எழுபது செய்யுட்களாலாகிய ஒரு நூல்.