(46)
|
காணாச்
சுனையுங் கருநொச்சி மாமலர் கற்றவளை
கோணாத் திருவடி சித்தர் குகையுங் குராநிழலும்
வேணாடன் போற்றவும் பொன்மான் கலையை விழவெறிந்து
வாணாளு மீளத் துதிப்பதன் றோகொங்கு மண்டலமே |
பச்சோடலிங்கம்
- பாப்பினிமடவளாகம்
(47)
|
நீடாழி
லோகம் புவனங்கள் மேரு நெடுவரையும்
நாடாளுங் காங்கய நாட்டில்வந் தோர்நன் னளினமலர்த்
தாடாளர் கொங்கினிற் பார்ப்பதிப் பச்சை தழைக்கவெங்கும்
வாடாத பச்சோட லிங்கமும் வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) பச்சோடலிங்கம் என்பது காங்கேயமடுத்து வடகீழ்த்
திசையிலுள்ள பாப்பினி மடவளாகத்தில் உள்ளது. அம்பிகையின்
திருநாமம் பச்சைநாயகி என்பது. பெரியநாயகி என்பதும் பெயராம்.
அம்பிகை இறைவனுக்குப் பச்சை ஓட்டில் அமுதளித்ததால்
இறைவனுக்குப் பச்சோடலிங்கர் எனப் பெயருண்டாயிற்று என்பர்.
பச்சோடநாதர்
கோவிலையடுத்து நாகபுஷ்கருணியென்னும் பச்சோட
தீர்த்தமுள்ளது. பச்சோட தீர்த்தத்தில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை
திருநீறு நிறைந்த பசுமண் கலயமொன்று வெடி சப்தத்துடன் தானாக
மேலெழுவது கண்கூடு. பாப்பினிக்குப் பார்வதிபுரம் என்று பெயராம்.
"ஓங்குபார்ப்பதி
நற்பரஞ்சேர் வழி"
(சிவமலைக்குறவஞ்சி)
"அருளுலவு
பச்சோட நாதர்பெரி யம்மைதாள்
அனுதினம் மறவா தவா."
(காணிநூல்
- தோடைகுலம்)
|
மடவளாகம்
1155 D. 2808 - 2. மடவளாகம் பச்சோடநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தி சந்நிதி கர்ப்பக் கிரகத்தில் அர்த்த மண்டபத்தில் உள்ள
சாஸனம்.
|