மண்
குதிரை புல் தின்றது - முனையாம் பூண்டி
(43)
|
நண்ணுந்
திரைப்புனல் சூழும்பொருனை நதிசிறந்த
விண்ணும் புகழ்கின்ற தென்கரை நாட்டினில் வீறுடனே
கண்ண னிளம்பிள்ளை செல்லாண்டி யம்மைதன் சன்னதியில்
மண்ணின் குதிரைபுற் றின்றது வுங்கொங்கு மண்டலமே |
அடிமைமாதைக்
கொண்டு உத்தரம் சொன்னது -
கொங்குவேள்
(44)
|
நீதப்
புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையில் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக்கொண் டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
உதயேந்திரன் காதை - உதயணன் காதை. கதை,
பெருங்கதை, கொங்குவேள் மாக்கதை என்பன இதன் வேறு பெயர்கள்.
மூன்று பிறப்பு - குணாட்டியர், துர்விநீதன், கொங்குவேள் என மூன்று
பிறப்பெடுத்தது. மூன்று பிறப்பிலும் முறையே பைசாச மொழியிலும்,
வடமொழியிலும், தமிழ் மொழியிலும் உதயணன் கதையைச் செய்தான்
என்பர்.
சங்கத்தார் - விசய
மங்கலத்துத் தமிழ்ச் சங்கப் புலவர்.
மிளகு
பயிறானது - அப்பரமேயதலம்
(45)
|
நானிலம்
புன்னை வனநாதர் சேர்வை நளினமலர்க்
கானன் மிளகைப் பயிறாக்கி யேகங்கை மேற்கழைத்துத்
தேனின் வணிகர் பயிறை மிளகாய்த் திரும்பவைத்து
வானவர் கொற்றையி லப்பரர் வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
காண்க கார்மேகக் கவிஞரின் கொங்குமண்டல
சதகம்பாடல் எண் : 84
|