பக்கம் எண் :

175

             தென் முடக்கூர் நச்சுப் பொய்கை

39.தூண்டு வயிரத்தி னானூற் றுவருடன் சூதினின்றோற்
றீண்டிய கானகஞ் சென்றவந் நாளெழில் வேட்டைக்குப்போய்
நீண்ட களப்பஞ்ச பாண்டவர் தானச்சு நீரருந்தி
மாண்டுயிர் பெற்றதுந் தென்முடக் கூர்கொங்கு மண்டலமே.

                ஊதியூர் - கொங்கணராசன்

(40)ஆரூரி லோர்மலை யாளத்து வேந்துவந் தாலயத்து
ஊரூர் புகுந்துதன் னூருக்குப் போகையி லூதிநகர்ச்
சீரூருந் தென்கரை நாட்டி லிருக்கத் திருமலைமேல்
வாரூ ருமைதடுத் தாள்வது வுங்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) மலைநாட்டு மன்னன் கொங்கணராசன் என்பவன்
திருவாரூருக்குத் திரும்பி வரும்பொழுது வழியிலுள்ள பல தலங்களையும்
தரிசனம் செய்துகொண்டு வந்து கொங்கில் தென்கரை நாட்டில் உள்ள
ஊதியூரில் தங்கினான். அப்பொழுது அத்தலத்து அம்பிகை அவனுக்குச்
சிவயோக சித்திகளுண்டாகச் செய்து அவனை அம்மலையில் தங்கும்படி
செய்தாள் என்பது தலவரலாறு.

                    சென்னிமலை

(41)திணிமுடிச் சேடனும் வாயுவுந் தர்க்கித்துச் செம்பொனொளிர்
அணிமக மேருவைச் சுற்றுகை யாலம் மலையினுச்சி
நணுகிய காலி லடிபட்டுப் பூந்துரை நாட்டில்விழ
மணிமுடி சென்னி மலையான துங்கொங்கு மண்டலமே

          மாமாங்கச் சுனை - சென்னிமலை

(42)தேமாங் கனிபல வின்கனி வாழைச் செழுங்கனியு
மாமாம் பயறுங் கடலையு முட்கொண் டருள்புரியு
மேமாங்க வேழ முகேசுரன் கோயிற் கெதிர்ச் சுனையில்
மாமாங்கம் பொங்கி வழிபுகழ் கொள்கொங்கு மண்டலமே