பக்கம் எண் :

183

"சீருலவும் மதுரையில் சொக்கேசர் மீனாட்சி
     செயலருள் கிருபையதனால்
 சிங்காச னாதிபதி அதிவீர பாண்டியன்
     செங்கோல் செலுத்து மந்நாள்
 சீரான காங்கயனன் னாட்டினிற் கீர்த்திபெறு
     செயகொங்கு மன்றாடியார்."

(கம்பர் வாக்கியம்)

     முதலிக் காமிண்டன் - காங்கேய மன்றாடியின் குமாரன் முதலிக்
காங்கேயன். அவன் சுந்தர பாண்டியனுக்குத் துணைவனாய் வாழ்ந்தவன்.
பாண்டியன் மேல் பகைகொண்ட ஒட்டிய தேசத்து வேந்தன்
பாண்டியனுக்குத் துணைவனாகிய முதலிக் காங்கேயன் மேல் போருக்குப்
படையெடுத்துக் கொண்டு வந்தான். அதனையறிந்த முதலிக்காங்கேயன்
காடையூரில் வீற்றிருந்தருளும் காடேசுவருடைய பாகத்தில் விளங்கும்
பங்கயச் செல்வியை வழிபட்டு அம்பிகையின் கோயில் தான் நெடுநாளாக
வளர்த்துப் பழக்கி வைத்திருந்த வலியன் என்னும் காடைக் குருவிகளைத்
திறந்து விட்டுப் பகைவனுடைய சேனைகளின் மேற் பறக்கும்படி செய்தான்.
அக்காடைகள் ஒட்டிய மன்னனது மிகுதியான யானை குதிரைகளின்
கண்களையும் ஒட்டிய வீரருடைய கண்களையும் கொத்திப் பிடுங்கின.

     அதனால் ஒட்டிய வேந்தன் போர் செய்ய முடியாமல் தோல்வி
அடைந்தான். முதலிக்காங்கேயன் ஒட்டியனாற் சிறைசெய்து கொணரப்பெற்ற
வேந்தர் பலரையும் விடுவித்தான். போர் நிகழ்ந்த இடம் நட்டூர் என்பது.
இதனையறிந்து பாண்டியன் மிகவும் மகிழ்ச்சியுற்றுக் கடக சூடாமணி
(யானை) சங்கப்பலகை, ஆறுகாற்பீடம், புலித்தண்டை விருது, ரத்னமுடி
ஆகியவற்றையும் கருமாபுரம் பழனைநல்லூர் முதலிய ஊரதிகாரங்களையும்
முதலிக் காங்கேயனுக்கு வழங்கினான்.

"கொற்றவனு மினியசுந் தரவீரபாண்டியன்
     கொங்குதா ராபுரத்தில்
 கூறுமைம் பத்தாறு தேசத்தி லுள்ளவர்கள்
     கொங்கிலுள துரைகளறிய
 வெற்றிபுணை காங்கெயமன் றாடியென்றபிடேக
     மேவிமணி முடிகள் பெற்றான்
 கொற்கைநக ரரசுபுரி காண்டீப........................
     .................. காடைநகர் முதலிமன்றாடியே,

(முதலிக் காமிண்டன் முடிசூட்டுப் பாடல்)