பக்கம் எண் :

184

"திடமருவு முருகவிழ்க் கொன்றையொடு பொற்சடை
     சிறந்தநட் டூரர்பேரில்
தெரியாம லொட்டியன் கரடமத கரியுடன்
     திரண்டுவந் துற்றபொழுதில்
வடிவனைய செவ்வரி படர்ந்தநற் காடைதான்
     மருவலர் வெருவி நிற்க
மதகரி செகுத்துமொன் னார்படை வதைத்திட
     ............ ............ ............ ............ ............
பாண்டியன் கேட்டுமகிழ் பண்புபெற நின்னையும்
     ................. வரிசை தந்தான்
............ ............ முதலி மன்றாடிதான்
     ............ அன்புடன் வரிசை பெற்றான்

                         (வழுதிநாட்டுக் காமிண்டன்)

............ ஒட்டியனை வெட்டித் தரங் கொண்டதால்
     ............ ............ ............ ............ மெச்சி
தவமிகுந்திடும் பெரிய காங்கயமன் றாடிக்குத்
     தனியரசு சூட்டினாரே.

               (காங்கேய மன்றாடி முடிசூட்டிப் பாடல்)

           காங்கேய மன்றாடியார் - காடையூர்

(60)வெள்ளைநல் யானைக் துதிக்கையி னாற்புகழ் மீனவன்றன்
தெள்ளிய சொக்கர் மதுரைமீ னாட்சி தெருவினிலே
கள்ளனஞ் சோலை மலைவா ழழகருங் காங்கயற்கு
வள்ளற் கடக முடிசூட்டு வார்கொங்கு மண்டலமே.

             காங்கேய மன்றாடியின் புகழ்

(61)அன்றாடி யீசன் றமிழ்புரி வாதுக் ககத்தியன்றன்
கன்றாடி யீசன் பொருள்தந்த கோத்திரக் காங்கயனைச்
சென்றாடி யீசன் பொதியனைச் சங்கமுஞ் செம்புருக்கும்
மன்றாடி மன்றாடி யென்றோது மேகொங்கு மண்டலமே.