பக்கம் எண் :

185

               பல்லவராயன் - காங்கேயம்

(62)



கோலாற் சிறுவர் சிவிகையி லேறநற் குஞ்சரந்தான்
பாலான சோழன்றன் செய்தொடி யேசிங்கைப் பல்லவன்றன்
காலாலே கீறிக் கரிசோழன் றன்னைக் கனிந்தவன்னை
மாலான செங்கண் முடிசூட்டு வார்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) யானையினால் எடுத்துவரப்பெற்ற கரிகாற் சோழனுடைய
முடிசூட்டுக் காலத்தில் காங்கேய நாட்டுப் பல்லவன் தன் காலாலே கோடு
கீறச் செங்கண்ணர் குலத்தார் யாவரும் அவ்வெல்லைக்குள் நின்று
சோழனுக்கு முடிசூட்டினர் என்பது வரலாறு. சிங்கை காங்கேயம். "மதியூகி
சிற்றெழுந்தூர் சிங்கையம் பதியில் மதன செங்கண்ண குலமால்" (சிதம்பரப்
பல்லவன் முடி சூட்டுப் பாடல்)

     காங்கேயம் பல்லவராயர் மரபில் வந்த சிதம்பரப் பல்லவன்
என்பவன் ஒட்டியரை வென்று வெற்றி கொண்ட கொங்கு நாட்டுத்
தலைவர்களில் ஒருவன்.

"திட்டமிகு மொட்டியனை வெட்டி விருதிட்டுமே
     சிம்மா சனத்திருந்து
சிரோரத்ன மகுடமும் ஆறுகாற் பீடமுயர்
     தென்கடகு சூடாமணி
திறல்வரிசை பெற்றிடும் விருது மகுடாசலன்
     சிதம்பரம் பல்லவனுமே"

                                   (கம்பர் வாக்கியம்)

            வேணாவுடையான் - கொற்றை நகர்

(63)



தண்டா மரைதனில் மீனவன் சங்கப் பலகைதனில்
உண்டாம் புலவரை மலையோர மாயெதி ரோடிவந்து
கண்டா தரிக்கும் பெரிய குலேந்த்ரன் கனகமுடி
வண்டாடும் பூங்கொற்றை வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே

     (கு - ரை) முன்பு பாண்டிய நாட்டில் பன்னீரியாண்டுப் பஞ்சம்
வந்தது. அப்பொழுது பாண்டியன் சங்கப் புலவர்களை யாதரிக்க