பக்கம் எண் :

186

முடியாமல் கைவிட்டான். சங்கப் புலவர்கள் பலதிசை நோக்கிச்
சென்றார்கள். பின்பு கொங்கு நாடடைந்தார்கள். சங்கப் புலவர்கள்
வருகையை யறிந்த வேணாவுடையான் ஊதியூர் மலைவழியாக
எதிர்சென்று புலவர்களை யழைத்துவந்து அவர்களுக்கு உண்டியும்
உறைவிடமும் கொடுத்துப் பாதுகாத்தான் என்பது வரலாறு.

     பாண்டியன் தன்னாட்டில் வந்த பெரும் பஞ்சத்தால் புலவர்களை
யாதரிக்க முடியாதவனாய் வேற்று நாடுகளுக்குப் போய் வருமாறு கூறினான்
என்பது இறையனார் களவியலுரை முதலியவற்றால் தெரிகிறது.

                    பொன்னூஞ்சல்

(64)



நெய்யினிற் கையிட நாற்பத்தெண் ணாயிரம் நீடுபெற
மெய்யினிற் கங்கை குலத்தில்வே ணாடன் விளங்குமகள்
கய்யினில் நெய்யுயர் பொன்னூசல் சேரக் கனிந்தவன்னை
வய்யிற் கனக முடிசூட்டி வாழ் கொங்கு மண்டலமே.

             சடையன் மரபும் குலமும் வாழ்கென
     
                 வாழ்த்தியது

(65)



சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) கலியுகம் ஆயிரத்தைம்பத்தொன்று - கலியுக சகாப்தத்தில்
நிகழும் சாலிவாகன சகாப்தம். கங்கை வங்கிசத்தோர் - வேளாளர்.