பக்கம் எண் :

187

               வெண்ணெய்நல்லூர்க் கண்ணன்
     
                 பாதம் வைத்தது

(66)



 பண்ணைகு லாதிபன் கம்பர்செய் ராமர் பனுவலதைப்
பெண்ணைநல் லாறுள் ளளவும் புகழும் பெருமைகண்டு
வெண்ணைநல் லூர னசோதைக்கு மைந்தனல் வெண்ணையுண்டு
மண்ணையு முண்டவன் பாதம்வைத் தான்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) அசோதைக்கு மைந்தன் வெண்ணையுண்டு
மண்ணை யுமுண்டவன் என்றது திருமாலின் பெயராகிய கண்ணன்
என்னும் இளமைப்பெயர் பெற்ற சடையனையாம். சடையனுக்குச் சரராமன்
என்ற விருதுப் பெயரும் உண்டு. இவற்றை "வெருவியோடின வெண்ணை
வாழ்கண்ணன் மேவாரின்" என்று அகலிகைப் படலத்திலும் (18) "கொடை
மீளியண்ணல் சரராமன்" என நாகபாசப் படலத்திலும் (263) கம்பநாடர்
கூறுவது கொண்டும் 'அவனுங் கண்ணன் சரராமன்" எனத் தக்க
ராமாயணப் பாயிரம் (3) கூறுவது கொண்டும் அறியலாம்.

கம்பருக்கு அடிமையானது

(67)



பார்த்திப கங்கையிற் சேரனும் சோழனும் பாண்டியனும்
கூத்தழை மாநகர் வீற்றிருந் தார்முன் குலோத்துங்கமால்
கார்த்திகைக் கம்பரைக் காவேரி யெச்சிலைக் காட்டுதற்கு
மாத்தெளித் தேயடி மைப்புகு வார்கொங்கு மண்டலமே

     (கு - ரை) பார்த்திப கங்கை - காவிரித்துறை யொன்றன்
பெயர் கூத்தழை மாநகர் - குளித்தலை யென்னும் ஊர். குளித்தலையில்
தமிழ் வேந்தர் மூவரும் கூடியிருந்த பொழுது குலோத்துங்க சோழன்
தனக்குரிய காவிரியின் பெருக்கத்தைக் கண்டு புகழ்ந்து பெருமிதங்
கொண்டிருந்ததைக் கண்டு கம்பர் சடையனது