பக்கம் எண் :

188

மரபினராகிய வேளாளர்களின் வீட்டில் விருந்தினர் உணவுண்டு வாய்
கழுவி வரும் எச்சில் நீரென்று இகழ்ந்து ஒரு வெண்பாப் பாடினர்.
சோழன் கோபமடைந்ததைக் கண்ட கம்பர் காவிரி நீரில் மிதந்து வரும்
சோற்றுப்பருக்கையுடன் கூடிய எச்சில் இலையைக் காட்டி மெய்ப்பித்தார்.
அது கண்ட சோழன் கோபம் தணிந்தான். கொங்குநாட்டு வேளாளர்கள்,
கம்பர் சடையனையும், தம்மையும் புகழ்ந்து தம்புகழை உயர்த்தினமையால்
கம்பருக்கு அடிமைகளாயினர். காவிரியைச் சடையன் மரபினோர் வீட்டில்
விருந்துண்டோர் வாய் கழுவும் எச்சில் நீரென்று பாடியதாக வழங்கும்
வெண்பா வொன்றுளது.

"மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
 கைகழுவு நீர்போகுங் காவிரியே - பொய்கழுவும்
 போர்வேற் சடையன் புகழ்மரபி னோர்பெருமை
 யார்கூற வல்லா ரறிந்து"

                                   (தனிப்பாட்டு)

"நாவிற் புகழ்கம்ப நாடற் கடிமையென்றே
 மாவைக் கரைத்து முன்னே வைக்குங்கங்கை"

என்னும் கம்பர் திருக்கை வழக்கப் பாடலடிகளால் "மாத்தெளித்தே
யடிமைப் புகுவார்" என்பதனுண்மைப் பொருள் புலப்படுவதாகும்.

           வாரணவாசி மன்றாடி - விசயமங்கலம்

(68)



பூரண மான சந்த்ரோ தயமும் பொருள்தந்த கோன்
நாரணன் கமல வல்லிகு றுப்புநன் னாட்டவர்கள்
ஆரணன்தாதி கனதனகும்ப மழித்துச் சங்கம்
வாரண வாசிநன் மன்றாடி வாழ்கொங்கு மண்டலமே

              அச்சுதராயர் - படைத்தலைவர்

(69)



படைமுனை வெல்லவு மச்சுத ராயர் படைத்தலைவர்
திடமுனை வீரர் பொருள்தந்த கோத்திரன் செருநர்முடி
இடர்செய்த தாளவ னிம்முடி வாரண வாசியெங்கள்
வடமலை முன்னவன் சீரங்கன் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) வாரணவாசி வடமலை சீரங்கன் என்னும் பொருள் தந்த
குலத்துச் சகோதரர்கள் அச்சுதராயனுடைய படைத்