பக்கம் எண் :

192

         சூலிமுதுகிற் சுடச்சுடச் சோறு படைத்தது

(78)



சூலி முதுகி லமுதிடுஞ் சோற்றைச் சுடச்சுடவே
பாலி னமுதம் படைத்தவர் காண்டமிழ்ப் பாவலர்க்குச்
சேலின் வணிகர் சமசுகள் கூறிச் சிறக்கமுத்து
மாலின் கனகமும் பிச்சையிட்டார் கொங்கு மண்டலமே.

            ஒருபலிக் கெழுபது பலிகொடுத்தது

(79)



எளியவர் நீலி வணிகனுக் கோர்பழிக் கேழுபத்துப்
பழிதனை யீந்து கொளுமுனை யாற்பதின் மூவர்முன்னே
விளிய குலேந்திரன் துலுக்கண்ண ராவுத்தன் மேவுகங்கை
வழிபெற மூழ்கி யெழுந்தான் புகழ்க்கொங்கு மண்டலமே.

       புற்றரவின் வாயிற் கையிட்டுச் சத்தியம் செய்தது

(80)



அம்பல வாணர்மின் காமாட்சி யம்ம னணிவரைமேல்
கம்பருக் கென்றும் அடிமையென் றேபற் கடியரவிற்
செம்பர் குலாதிபன் கைநீட்டி நாவிற்றிகழ் முத்தமாம்
வம்பர்கள் கண்ட னமரா பதிகொங்கு மண்டலமே.

     (கு - ரை) கொங்கு வேளாளரிற் செம்பகுலத்திற் பிறந்த அமராபதி
என்பவனொருவன் இருந்தான். அவன் தமிழ்ப் பெருங் கவிஞராகிய கம்பர்,
சோழன் முன்னிலையில் வேளாளரை யுயர்த்திப் பாடியது காரணமாகத்
தான் கம்பருக்கு என்றும் அடிமை யென்று பாம்பின் வாயிற் கைநீட்டி
வைத்துச் சத்தியம் செய்தான். அப்பாம்பு அவனுக்குத் தன் வாயிலிருந்த
மணியைக் கக்கியது.

"மைக்கடுவாய், மூக்கிற் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
 நீக்கிய நாக்கதனி னீட்டுங்கை"

                             (திருக்கை வழக்கம், - 10)

நித்த பசும்பொன்னை நீட்டுகொடைக் கன்னனைப்போற்
புத்தரவின் வாய்மணியாற் புகழ்பெற்றோம்.

                                (மேழிவிளக்கம், - 187)