கம்பர்
பல்லக்குச் சுமந்தவன்
மசக்காளிவேலன்
(85)
|
நாட்டாருங்
கொங்கி லிருபத்து நாலெனும் நாட்டிலெங்கும்
பாட்டாற் புகழ்கின்ற கம்பர்பல் லக்குப் பரிந்தெடுத்துக்
கோட்டாறு கோத்திரன் மசக்காளிவேலன் கொலுவில்வைத்து
வாட்டாறு சோழன் றிறைகொளு வோன்கொங்கு மண்டலமே. |
புற்றரவின்
வாய்மணியெடுத்துப்
புலவருக்கீந்தது
(86)
|
காணிக்கு
மைந்தன் றனைத்தேடி நின்று கவிஞருக்கு
ஆணிப்பொன் கேட்க விலையென் றுரைக்க வவன்மனையாள்
பூணிக்கை யாகப் புதர்வகும் புற்றர வாயினிலே
மாணிக்க மீந்தவன் வேலவன் வாழ்கொங்கு மண்டலமே. |
புலவர்
தாய் முதுகேறப் பொறுத்தது
(87)
|
புத்திரன்
றாயின் முதுகினி லேறப் புலவர்க்காய்ப்
பத்தெனு மாதஞ் சுமந்ததுண் டேபதி னெட்டுமுனை
சத்திய வாசக னாணூர்ப் பவுதை தரிக்கப்பட்டம்
வைத்ததுஞ் சர்க்கரை யுத்தமக் கோன்கொங்கு மண்டலமே. |
மடவளாகத்தில்
எல்லோருக்கும்
உணவளித்தது
(88)
|
விண்ணந்தை கோத்திரந் தேவா வமுதமும் வேலையிற்போய்ப்
பண்ணந்தை கோத்திர மொழிந்ததென் றேபதி பார்ப்பதியிற் |
|