பக்கம் எண் :

196

  கண்ணந்தை கோத்திர நயினா கலன்முத்துக் கார்த்திகையில்
மண்ணந்தை கோத்திரற் கமுதூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) பார்ப்பதி - பாப்பினியென்னுமூர். இதனையடுத்துள்ளது அறநிலையமான மடவாளகம்.

          கம்பநாடர்களாயிரவருக்குணவளித்தது

(89)



ஆதார மாகித் தமிழ்க்கம்ப னாடர்க ளாயிரம்பேர்
தாதாவு மென்னத் தனைநினைந் தேத்தத் தமிழ்க்கிரங்கி
ஓதாள னாண்ட பெருமான் விளங்கு முலகறிய
மாதா வெனப்புக ழன்னமிட் டான்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) தமிழ்க் கம்பநாடர்கள் - கம்பரால் தமிழ்ப்புலமை
பெற்றவர்கள்.

              புலவர்களை யுபசரித்தது

(90)



ஆடையு முத்து மணிமார்ப சோழ னகளங்கன்முன்
மேடை புகழ்ந்து வரும்புல வோரை விழைந்தழைத்துக்
காடைகு லாதிபன் பூந்துறை நாடன் கனகசெல்வன்
மாடையுந் தெய்வ வமுதிட் டான்கொங்கு மண்டலமே.

             வயிறு கீறி நிலை காட்டியது

(91)



தயவுறு புக்கொளி முதலைவாய்ப் பிள்ளையைத் தாயின்முனர்த்
துயரமுந் தீர வரவழைத் தோட்டிய சுந்தரற்காய்ப்
பயரகு லாதிபன் காளி யணன்மங்கைப் பரமனுக்கு
வயிறது கீறி நிலைகாட்டு வான்கொங்கு மண்டலமே.