பக்கம் எண் :

197

         சோழனுக்குமுன் பொன்னிறை கொடுத்தது

(92)



ஆடற்பரியும் புவனங்கள் மீதினி லம்புயமுங்
கோடவிழ் தஞ்சையில் மாநகராதி குலோத்துங்கன்முன்
கோடை குலாதிபன் காகுத்த நல்லான் துரைகள்மெச்ச
மாடையும் பொன்னும் நிறைகொடுத் தான்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) தஞ்சையிலிருந்த குலோத்துங்க சோழனுடைய
முன்னிலையில் தோடை குலத் தலைவனாகிய காகுத்த நல்லான் என்பவன்
மேன்மக்கள் புகழும்படி அரை வராகனெடையளவுள்ள பொற்காசுகளையும்,
பொற்கட்டிகளையும் தன்னெடையளவு நிறுத்துத் தானங் கொடுத்தான்
என்பதாம்.

     தோடைகுல வேளாளர்கள் பதினாறு ஊர்களைக் காணியாக
உடையவர்கள்.

"திருவுலவு காஞ்சி பார்ப்பதிகன்னி வாடியுஞ்
     செயகாள மங்கை முளசி
தேனகுகூத் தன்பூண்டி காகங் குழாநல்லி
     சேர்நசைய னூர்மணிய னூர்
தருவுலவு கொன்னையார் மேவுகற் றாங்காணி
     தர்மமிகு மோட தகடை
தமிழ்பெற்ற மோரூரு மாலத்தூர்ப் பட்டணந்
     தங்குமா னங்கூ ருடன்
அருளுலவு பச்சோடை நாதர் பெரியம்மைதாள்
     அனுதினம் மறவா தவர்
அன்புபெறு தோடைகுல சின்னைய நராதிபதி
     அருள் செல்வனேந்த்ர பூமன்
மருவுலவு சேனாபதிக் குரிசில் மைந்தனாம்
     மன்னவன் குழந்தை வேலன்
மகராச னெனவந்த மரபுளோ ரனைவர்க்கும்.
     வளமை பெறவரு காணியே."

(காணிநூல் - 27)

     பார்ப்பதி - பாப்பினி.