பக்கம் எண் :

198

           புலவர் பொருட்டு வேசி துயர் தவிர்த்தது

(93)



நாவலன் கீர்த்தி தனைத்தேடி யேநின்று ரம்பையினாற்
போவது மாவதும் மீள்வதென் றேபுகழ்க் கேயிரங்கி
ஆவல கோத்திரன் குங்குமப் பெரியா னள்ளிச் செம்பொன்
மாவுடை வேசி துயர்தவிர்த் தான்கொங்கு மண்டலமே.

         தமிழுக்கு மலைதெரிவாச மரமாய் விளங்கியது

(94)



கலைதெரி மூவரரசர்முன் கொங்கினிற் காணிக்குத்தன்
தலையை யரிந்து புவியினில் வாழ்ந்தவன் தண்டமிழ்க்கு
விலைய குலாதிபன் திருவாளி நல்லவன் வேடர்தந்த
மலைதெரி வாசம் புகழ்தரு வாங்கொங்கு மண்டலமே.

            மூவேந்தருக்குங் குடை கொடுத்தது

(95)



சேவேறி யீசன் மலர்ப்பாதம் போற்றித் தினம்பணியும்
கோவேந் திரகுலன் குழந்தைமுத் தேந்திரன் குபேரதனன்
மூவேந் தருக்குங் கவிகையளித்து முயர்தவத்தால்
மாவோங் கியசெல்வம் புகழ்படைத் தான்கொங்கு மண்டலமே.

                 சங்கம் வளர்த்தது

(96)



அண்ணறன் சங்கத் தனந்தன மீந்தா னகமகிழ
புண்ணிய பூப திலகனென் றேயுல கம்புகழ
விண்ணிடு திண்பரி சிவிகையு மீந்தனன் மீனவன்முன்
மண்ணினிற் சேர குல சங்க மன்கொங்கு மண்டலமே.