பக்கம் எண் :

199

                  புலவர்களிடத்திரக்கம்

(97)



கண்பூத் திரங்கி வரும்புல வோர்கள்தங் காதல்கண்டு
அன்பூத் திரங்கிய வன்னையைப் போலவு மன்னமிட்டுச்
செம்பூத்த கோத்திரன் குழந்தைநல் வேலன் சிறந்தமுத்து
வண்பூத்த கண்ட னமரா பதிகொங்கு மண்டலமே.

          சதாசிவனுக்கு எப்பொழுதும் அமுதூட்டியது

(98)



ஊனே நிறைந்துயர் தேவா வமுத முணவொழிந்தும்
தானே நிறைந்தும் வடுகுமக் காலஞ் சதாசிவற்குத்
தேனே நிறைந்து குலாய குலேந்திர தேவன்முத்து
வானே நிறைந்த வமுதூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

          சிவபெருமான் திருமுடியிற் பொன்முடிப்புச்
     
                    சூட்டியது

(99)



தென்னவர் தேவரு மூவரி ராசர் சிவன்சபையில்
அன்னவ னீயென்றழைத்துவந் தார்செய் யழற்கணற்குப்
பொன்னகு வாதிபன் பொன்னையும் வாரிச்செம் பொன்முடிப்பான்
மன்னுயிர் காக்க முடிசூட்டு வோன்கொங்கு மண்டலமே.

               கம்பர் பேர்விளங்க வாழ்ந்தது

(100)



விண்ணுக்கு மாதுக்குந் தேவர்க்கும் ராமர்க்கும் மென்முகிற்கும்
பெண்ணுக்குங் கற்புக்குங் காத்தவன் காண்கம்பர் பேர்விளங்க
எண்ணுக்குங் கீர்த்திக்குந் தொண்ணூறு மாறுக்கு மென்றடிமை
வண்ணக்க கோத்திர நல்லவன் வாழ்கொங்கு மண்டலமே.