கருத்து
:
பன்னிரண்டு
தலைமுறைகளாகப் பாதுகாத்து வந்து அச்சுதராயருடைய
(சிம்மாசனம்) தலைமைப் பீடத்தையும் அவருக்குரிய "வேளாளர் கோன்"
என்னும் பட்டத்தையும் பெற்றவன், திருமலை நல்லான் என்பவனுடைய
குமாரனாகிய வாரணவாசி என்பவன். அவன் வாழ்ந்தநாடு கொங்குமண்டலம்
என்பதாகும்.
வாரணவாசியின்
மரபினர் சிலர் கதித்தமலை ஊத்துக்குளிப் பகுதியில்
வாழ்ந்து வருகின்றனர்.
மெய்கண்டதேவரைப்
பற்றிய மற்றொரு
வரலாறு
நடு
நாட்டிலுள்ள திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப
வள்ளலுக்குக் காங்கேயன் என்ற ஆண்மகவும் மங்களவல்லி என்ற
பெண்மகவும் உண்டு. சடையப்ப வள்ளல் சிவலோகபதவியடைந்த சில
காலத்தின் பின் காங்கேயர் தன் தங்கையைப் பெண்ணாகடத்தில்
வாழ்ந்த அச்சுதகளப்பாளரென்பவருக்கு மணம் புரிவித்தார். மங்களவல்லி
திருவெண்காட்டுச் சிவபெருமான் திருவருளால் ஒரு ஆண்மகவைப்
பயந்தாள், அம்மகவும் ஓராண்டுக் காலமாகியும் முறுவல் செய்யாமலும்
வாய்திறந்து குதலைமொழி பேசாமலுமிருந்தது. தாய் தந்தையர் கவலை
யெய்தினர்.
திருப்பெண்ணாகடம்
சென்றிருந்த காங்கேயர் தன் தங்கையின்
மனவருத்தத்திற்கிரங்கித் தன் மருமகனாகிய செல்வக் குழந்தையைத்
தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து திருவெண்ணெய் நல்லூரில்
வளர்த்தார். ஒரு நாள் அப்பிள்ளை வீதியில் விளையாடும் போது
பரஞ்சோதிமுனிவர் அவருக்கு உபதேசம் செய்து போயினர்.
பொல்லாப்பிள்ளையாரின் கோயிலுக்குச் சென்றிருந்த அப்பிள்ளையார்,
பொல்லாப்பிள்ளையாரிடம் உபதேசப் பொருளையறிந்தார். அவ்வுபதேசப்
பொருளைப் பன்னிரு சூத்திரங்களடங்கிய சிவஞான போதமென்னும்
நூலாகச் செய்தருளினர் என்பது திருவெண்ணெய் நல்லூர்த்தலபுராணம்
(மெய்கண்டதேவர் மெய்ப் பொருளுணர்ந்த படலம்).
|