சடையன் மரபே என்பது
வரலாறு. மெய்கண்ட தேவர் அவதரித்ததும்
திருவெண்ணை நல்லூரே.
"மயர்வற
நந்தி முனிகணத் தளித்த
உயர்சிவ ஞான போத முரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெ சுவேதவனன்
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்" |
என்பது சிவஞானபோதப்
பாயிரம்.
மெய்கண்ட
தேவர் சடையனுடைய மகள் வயிற்றுப்பேரர்.
சடையனின் மகன் அச்சுதனார் என்பவர் தனக்குப் பிள்ளையின்மையால்
தன் தங்கையின் மணி வயிற்றுப் பிள்ளையாகிய மெய்கண்டதேவரைச்
சுவீகாரம் செய்து கொண்டார். அதனால் மெய்கண்டதேவர் வெண்ணெய்
நல்லூரில் வாழ்ந்து பரஞ்சோதி முனிவரால் ஞானோதயம் பெற்றுச்
சிவஞானபோதம் அருளிச் செய்தார். மெய்கண்ட தேவருக்குத்
திருவெண்ணெய் நல்லூரில் கோவில் உள்ளது.
திருவண்ணாமலைச்
சாஸனம் திருவெண்ணெய் நல்லூருடையான்
மெய்கண்டதேவன் ஊருடைய பெருமாளாகிய எடுத்தது வலிய வேளர்
என்பவன் தான் எழுந்தருளுவித்த விக்கிரகத்துக்குச் சில தானங்கள்
செய்ததாகக் கூறியிருக்கிறது. இச்சாஸனம் திரிபுவன சக்கரவர்த்தியின்
ராஜராஜதேவர் (III) ஆட்சிக் காலத்தில் கி.பி. 1232 - ல் ஏற்பட்டது.
முன்பு
"பண்ணைகோன்" என்பதற்கு வேளாளர் குலங்களில்
ஒன்றாகிய பண்ணை குலத்துத் தலைவன் எனப் பொருள் கண்டோமாயினும்
ஈண்டுப் "பண்ணைகுலேந்திரன்" என்பதற்குச் சிறந்த வயற் கூட்டங்களுக்குத்
தலைவன் என்னும் பொருள் கொண்டதே பொருத்தமும் சிறப்பும்
உடையதாகத் தெரிகின்றது.
விசயமங்கலம்
- வாரணவாசி
ஆணவரென்று
பனிரெண்டு பட்டங்க ளாகத்திக்கு
வேணுமென் றச்சுத ராயர்சிம் மாசனம் வேளாளர்கோன்
காணவு மேவும் திருமலை நல்லான் கனகரத்னம்
வாரண வாசிமெய் மன்றாடி வாழ்கொங்கு மண்டலமே. |
|