வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களின்
உரைக்குறிப்பு
(கைப்பிரதியில் உள்ளவாறு)
பாடல்
29. "ஆணெவரென்று"
உரை
:- விசயநகரை யாண்ட அச்சுதராயரால் சிம்மாசனமும்
வேளாளர்கோன் என்னும் பட்டமும் பெற்றவன் திருமலை நல்லான்
குமாரனாகிய வாரணவாசி மன்றாடி என்பதாம்.
"வாரண
வாசிவளர் பூந்துறை கொங்கு மண்டலமே" எனக் கார்மேகக்
கவிஞர் கொங்குமண்டல சதகம் கூறுவதால் இவன் பூந்துறையில்
வாழ்ந்தவன் எனத்தெரிகின்றது (பாடல் 83 வாரணவாகனனோவென"
என்ற பாடலும் அதன் உரையுங் காண்க)
பாடல்
30. "வேழங்கயலும்"
(திருவமட்டி
குலம் திருவம்படிகுலம் திருவம்படிவகுலம்)
வேள்
முதலியோர் வாழும் கறையூரில் சிறப்புறவிளங்குபவன்
திருவம்படி குலத்து நல்லவன் என்பதாம்.
வேள்:
மன்மதன் உயிர்கட்கு இன்பம் நல்குபவன் வேள் முதலிய
ஏழும் பூமியிற் சிறந்து விளங்குகின்றன. அதுபோலக் கரைசையில்
சிவனுக்குத் தொண்டு செய்து வாழும் ஏழ்குலத்துத் திருவம்பபுவ குலமும்
ஏழு உலகத்தாரும் வாழ்கின்றன ரென்பதாம்.
திருவம்படிவம்
என்பது மகுடலிங்கத்தின் உற்சவத்திருவுருவம்
திருவம்படிவகுலம் என்பது மகுடலிங்கத்திற்குத் திருத்தொண்டு செய்து
வாழும் குலம். சிவன் ஏழ்குலம் என்றது சிவனுக்குத் தொண்டுபுரியும்
காடை முதலிய ஏழுகொத்துத் திருவம்படிவர்கள் என்பதாம்.
இவர்கள் வேளாள குலத்தினர்.
"விடம்பயில்
களற்குத்தங் குலத்து மின்னனார்
நடம்பயில் கணிகை மாராக நல்கிநீ
ரிடம்பயில் புவியினீ னிசைநிறுத்தி வாழ்
திடம்பெறு சதுர்த்தர்தம் சிறந்த வில்லமும்"
(கொடுமுடிப்
புராணம் அங்க வருத்தகச் சருக்கம்)
|
|