வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்
அவர்களின்
கைப்பிரதியிலிருந்து
கிடைத்த பாடல்கள்
(பூச்சந்தை
குலம்) *
காச்சிய
பாலொடு தேவா வமுதங் கனியுநெய்யும்
பாச்சிய தேனும் பெருக்கா யளித்தனன் பாவலற்கு
பூச்சந்தை கோத்திரன் பூந்துறை நாடன் புகழலகன்
வாச்சு தெனக்கன பொன்மாரி பெய்கொங்கு மண்டலமே |
(இதுவுமது)
அணிக்கொடி
யாமலர் சிவனிட பூசைக்கு அன்புவைத்தே
யிணக்கிய புற்பங் குறைந்துதென்றேமலர் எண்ணியெண்ணி
துணிக்கரம் வீர மணிக்கட் டறுத்துச் சுகமுகன் முத்து
மணிக்கரஞ் சாத்திய பூச்சந்தை கோன்கொங்கு மண்டலமே |
மேல்கண்ட
பிரதிகளில் முற்றிலும்
பாடபேதங்களாக
உள்ளவை
1 வாலசுந்தரக் கவிஞர்
சதகத்தில் "கார்கொடுத்தோ என்னும்"
தொடக்கப்பாடல் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.
"தேர்கொடுத் தோனும்
பரிகொடித்தோனும் திருமனையில் தார்கொடுத்
தோனும் தலைகொடுத் தோனும் தமிழ்க் கிரங்கி ஊர்கொடுத்தோனும்
உயிர்கொடுத்தோனும் உதையுதைக்க மார்கொடுத் தோனும் இவர்காண்
புகழ்கொங்கு மண்டலமே
2 "அற்றது கூடவும்"
எனும் 84 ஆம்பாடல்
(அந்துலகுவம்)
அற்றது
பொருதப் பாடி யவ்வைக் கடிமையென்று
பெற்றவன் கீர்த்தி கங்கா குலயோகப் பிரபலனாம்
முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின் பாய்க் கொடுத்து
வைத்தவன் அந்துவ கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே |
(மேல்கண்ட
பாடல்கள் இரண்டும் கம்பநாத சுவாமியவர்கள்
நூலிலும் இவ்வாறே அமைந்துள்ளன) இரண்டாம் பாடலில்,
"சுந்தரர்
பாடற் கடிமையென்று" எனவும், மூன்றாம் சதகத்துள் "அவ்வைக்
கடிமையென்று" எனவும் எழுதப்பெற்றுள்ளது.
*
அரச்சலூர்க் காணியாளராயிருந்தவர் பூச்சந்தி குலத்தினர்
வேட்டுவர் தொல்லையினால் கேரள தேசம் சென்று
சிறப்பாக
வாழ்கின்றனர். (கைப்பிரதியில் உள்ளவாறு)
|