பக்கம் எண் :

249

கொங்குமண்டல சதகங்கள் பாடபேதங்கள்

முதல்சதகத்தின் பாடங்களுக்கு மூன்றாம் சதகத்தில்

வரும் பாடபேதங்கள்

(எண்கள் சதகத்தின் பாட்டெண்கள்)

11.  "நாளும் கடல்புடை சூழ் கருவூரினிலண்டர் தொழ"

19.  'பரவை மெய்ப் போகங் கொள்ளும்,' 'படர்பொய்கையில்', 'அன்று     கொன்று'

23.  'நிலைகொண்டிருக்க'

25.  "பாணன் முதலெவரென்றாலும்"

26.  "மோகமுறு", புதுப்பூத் தேனுமூறும்"

27.  "சிவகாமி ஆண்டவன் பெருந்தெருவில்" "மிதமீறியபூவை"

37.  "மாற்றுரை கொண்டது"

53.  "சவுக்கடி பட்டதும் கொங்கு மண்டலமே"

73.  "சங்கரன்சோழன்". "தங்கப்பொற்றேர்"
    "சிங்கையிற் செங்கண்ணன் மைந்தனுக் கீய்ந்துசிதம்பரப் பல்லவர்"     "நற்புலவருக்கு" "மங்கையிற் செங்கண்ணன் தேர் கொடுத்தான்"

81.  "வாயாரச் சாபித் தெரித்ததும்"

84.  "அணித்தமிழ் சேர் தென்கரை நாட்டில்"
    "தமிழ்க் கீயு மென்னிலோர் பாவிசெட்டி"

85.  "நல்லார் புகழ் மசக்காணி". "நாவில்வசை"

89.  "கரிகாலசோழன் மகனுக்கு"
    "மயக்கவும் கொளக்குரை வேதியன்தான்"
    "மண்ணுருப் பாவையைப் பார்த்துச் சுட"
    "வலி நீக்கி அவ்வலிப்பைத் தீர்த்தவர்"

94.  "கொற்றையிற் றன்னிலு"
    "அப்பிரமேசர் ஆலயத்தில்"
    "வெட்டி வைத்தான் பெய ரென்றென்றைக்கும்"
    "முத்தமி ழாயரும் சிம்மாசனத்தில் முதல்வனென்று"
    "வைத்தான் பிடாரர் வேணாடர் வாழ்கொங்கு"