பக்கம் எண் :

256

கனமான ஆந்தைகுலர் பட்டாலி நரபாலர்
     கதிதனஞ்சய குலமும்
கங்கா குலத்தரசர் வாகைகுலர் அரசைகுலர்
     கனமேவு முரசுகுலமும்
காசினி மதிக்கவரும் வாங்கல் பெருங்குடி
     களஞ்சியர் ஒழுக்கர்குலரும்
கன்றுதவு வெண்டுவன் அந்துவ குலத்தரும்
     கனமாடை மணியன்ஈஞ்சன்
கதித்திடும் புத்தகுலர் முத்தகுலர் அண்ணகுலர்
     கார்காத்த பெரியகுலரும்
கனமலையில் வில்லம்பர் பதுமைகுல வேளாளர்
     கனவாள ஓதாளரும்
காவேரி நதிகுலன் ஆரியகுலத் தரும்
     காவைகுலர் ஆவைகுலரும்
கனத்த தாரணிகுலர்1 சந்திரகுல ரிந்திரகுலர்
     கனவேம்பன் மேதிகுலரும்
காரணப் பதுமைகுலர் பூரகுலர் பாண்டிகுலர்
     காரைகுலர் பூச்சைகுலரும்
கதிர்குலவு மலையகுலர் காமகுலர் சோமகுலர்
     கதித்திடும் அழகர்குலமும்
கனமேவு வெள்ளிகுலர் தனியகுலர் தம்முடன்
     கற்பித்த சக்திகுலரும்
கனத்தகுலர் பாலகுலர் பாத்தியகுலர் பரதகுலர்
     கருமேவு கொல்லிகுலரும்
காங்கயநன் னாட்டிலுயர் பரஞ்சைநகர் விழியகுலர்
     கனவேத்தி னாககுலரும்
கந்தமுயர் வேதகுலர் செழியகுலர் கிழியகுலர்
     காரணப் பாண்டிகுலரும்
3.









பேருலவு குண்ணை குலர் பரம்பைகுலர் பாலகுலர்
     பலமுலவு நீலகுலரும்
பேதகமில் லாமல்வளர் நெல்லிகுலர் நெழவிகுலர்
     பெலமுலவு புல்லகுலரும்
பேறான ஆழிகுலர் மின்னைகுலர் மூலைகுலர்
     பூவைகுலர் புலுவகுலர் புனிதபாக்கிய குலரும்
பாலவா கைகுலர் பொன்னிகுலர் பரமகுலரும்
     போதகுலர் நீதிகுலர் மரையகுலர் போசைகுலர்
போதிகுலர் ரோடை குலர் ஓசை குலரும்
     பெருகுபுள் ளந்தைகுலர் புளுவகுலர் யெருவகுலரும்


     1. 'கனத்த பொருளந்தை குலர்' என்றும் பாடம் உளது.