|
ஆங்கை வருத்தம் மனந்தனில் உற்ற ததுபுகலில் மாங்கனி யற்றுப் பொருந்தின துங்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'உற்ற ததுபுகல'; 'மாம்பறை'; 'தேங்கும்புகழ்' 'ஒண்மையதாம்
(தப்பித்தோடி வந்த மல்லரைச் சகாதேவன் கழுத்தறுத்தது)
15
|
திடங்கொண்ட வாட புரத்தினில் வீமன் மற் செட்டிகளை இடங்கொண்ட செங்கையிற் கொள்கையி லேயிளைத் தோடொருவன் தடங்கண்டு கேட்க சகாதேவ னுந்தண்ணித் தண்டுறையில் மடங்கக் கழத்தை யறுத்தது வுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'கொல்கையிலே'; 'கழுத்தைத் திருப்பியதும்'; 'கேட்கிற' "கொள்கையிலேயிழைத்" வாடபுரம் - தாராபுரம்
(பூசகுலம்)
16.
|
ஆதண்ட மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய் தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே |
(பி..ம்) "சோழன் அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி வெட்பு", சோழரகளங்கனுடன்',
(பூசகுலம்)
பூசைகுலம்
17.
|
யோசனை புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம் பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி', 'கோன் செம்மல்'
(ஓதாளகுலம்)
18.
|
காண்டா வனமெரித் தீசனுக்காகக் கழுத்தரிந்து பூண்டான் சிவமணி மாலையி னான்புகழ் ஆரைநல்லூர் ஆண்டான் றன்ராசி ஓதாள கோத்திர ரனைவர்கலி வேண்டா மெனப்புகழ்ந் தன்னமிட் டான்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'காண்டாபுரிமெரி', யாண்டான் றன்னாசி; ஆண்டான் றன்னாசி, 'வாண்டாமென'
|