10
|
நவமான மாங்கனி நாரத மாமுனி நம்பர்செங்கைத் தலமீது தந்து கொடுப்பக்கண் டேதற்க மாய்முருகன் நிலமேழை யுமொரு கைநொடிப் போதில் நெடுமயில்மேல் வலமாக வந்ததும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே |
(குறிப்பு) கார்மேகக் கவிஞரின் முதற்சதகத்தில் "தீத்திகழ்மேனி" என்னும் பாடலின் கருத்தை விளக்கும் பாடல்; வாய்த்த பழனியென்றோனதுங் கொங்கு மண்டலமே" என வரும் ஈண்டு, 'வைகாவூர் சூழ் கொங்கு மண்டலமே' எனக் கூறப் பெற்றது.
(வெள்ளையானை சாபம் தீர்ந்தது அவிநாசி)
11
|
இததறு மாமுனி இந்திரற் கீய்ந்த வெழிற் றொங்கலை துதைபட வாங்கி மிதித்திட் டுழக்கிய தோடத்தினால் இதமுறு வன்புகழ் சேரவி நாசியில் சென்று வெள்ளை மதகரி சாபம் தொலைத்தது வுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'வெனிற்றொங்கலை,' 'சாபம் துலைத்ததுவும்,' 'உளக்கிய"
(கொல்லியம்பாவை)
12
|
அரிக்க யனுக்கரி தாயப் பொன்மேனி யறப்பள்ளியார் கிரிச்சுர மீனைத் துண்டப் படவெட்டிக் கிழித்தறுத்து பொரிச்சுண்ண வெண்ணிறப் பைந்தோன்றி நீருக்குள் போகவிட வரிக்கயல் வாழ்கொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'அரப்பள்ளியார்' 'நீர்க்குள்,' 'பைந்தொடி'
(பேரூர் பிறவாநெறி)
13
|
மீனெறி வெண்டிறை சூழ்வா ருதிசுற்று மேதினியில் தேனெறி பூங்கொன்றை சூடும்பட் டீசர் திருவருளால் ஊனெறி யெண்பத்து நான்குநூ றாயிரத் தூடுபிற வானெறி யென்பது பேரூர் பயில்கொங்கு மண்டலமே |
(பி..ம்) "மீனேறி, தேனேறி, ஊனேறி" 'ஊனென்றி'
(அறுந்த மாங்கனி பொருந்தினது)
14
|
ஓங்குந் திரைக்கடல் சூழுல கத்தினில் உண்மையதாய் தேங்கு புகழ்கொண்ட மாம்பரை யூரினிற் சேர்வனத்தில் |
|